முகப்பு /செய்தி /வணிகம் / இந்தியாவில் களமிறங்கும் ஜூம்... அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

இந்தியாவில் களமிறங்கும் ஜூம்... அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

ஜூம் நிறுவனம்

ஜூம் நிறுவனம்

ஜும் தளத்தில் இணைந்தது முதல் மாதந்தோறும் 50 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

இந்தியாவில் ஏற்கனவே அமேசான், பிளிப்கார்ட், மிந்த்ரா போன்ற வர்த்தக தளங்கள் இருந்துவரும் நிலையில் ஐரோப்பாவை சேர்ந்த ஜூம் (Joom) என்ற நிறுவனமும் இந்தியாவில் இ- காமர்ஸ் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. மும்பை, புதுடெல்லி, இந்தூர், ஜெய்பூர், சூரத், ரூர்கி மற்றும் லூதியானா என எட்டு நகரங்களில் தனது முதல்கட்ட சந்தையை ஆரம்பித்துள்ளது.

சர்வதேச அளவில் இ-காமர்ஸ் வர்த்தகத்தில் இருக்கும் முன்னணி நிறுவனமான ஜூம், எடுத்தவுடன் இந்திய சந்தையை பிடித்துவிட முடியாது என்றாலும் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் உலக சந்தையில் பங்கு பெற ஒரு வாய்ப்பை உருவாக்கி, அதன் மூலம் சந்தையை விரிவுபடுத்த முடிவுசெய்துள்ளது. இதனால் இந்தியாவில் இருக்கும் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான்-க்கு பெரிய அளவிலான பாதிப்பு இருக்காது.

2016 ஆம் ஆண்டு லாட்வியாவில் துவங்கப்பட்ட ஜூம் நிறுவனம், அதற்கு அடுத்த படியாக இந்தியாவில் தனது சந்தையைத் தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து வளர்ச்சிகளை அடைந்து சர்வதேச சந்தையில் ஆதிக்கம் செலுத்த முயன்று வருகிறது. 2022 இல் இந்திய சந்தையில் நுழைந்த ஜும், அழகு சாதன பொருட்கள், நகை, க்ரிஸ்டல் ஹீலிங், மருத்துவம், சரும பராமரிப்பு, தலைமுடி பராமரிப்பு, பெண்களுக்கான அழகுசாதன பிரிவில் அதிக விற்பனைக்கான வாய்ப்புகள் இருப்பதால் அந்த பிரிவுகளை தேர்ந்தெடுத்தது.

ஜூம் தளத்தில் இதுவரை சுமார் 350-க்கும் அதிக வியாபாரிகள் இணைந்துள்ளனர். இந்தியாவில், தற்போது ஆடை அணிகலன்கள், ஹெல்மட், ஆர்மர், ஷீல்டுகள், தேனீ வளர்ப்பவர்களுக்கான தயாரிப்புகள், குதிரைகளுக்கான சேணம், ரத்தின கற்கள், கார்பெட் மற்றும் பாரம்பரிய துணிகள் என பல்வேறு பிரிவுகளில் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா தனது முதல் சர்வதேச சந்தைகளில் ஒன்றாக மாறும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது.

2023இல் ஜும் சர்வதேச அளவில் B2C இ-காமர்ஸ் சந்தையின் மதிப்பு 5.57 ட்ரில்லியன் டாலர்களாக மாறும் என்றும், இதன் வளர்ச்சி CAGR அளவில் 25.8 சதவீதமாக இருக்கும் என கிராண்ட் வியூ ஆய்வில் கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியா, ஐரோப்பிய பகுதிகளைத் தாண்டி ஆசியா பசிபிக் பகுதியிலும் இதன் வளர்ச்சி கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மணக்காத மல்லி சாகுபடி.. வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க புதுக்கோட்டை ஆலங்குடி விவசாயிகள் கோரிக்கை..

ஜூம் நிறுவனம் ஆன்லைன் தளம் மட்டுமின்றி, ஜெர்மனியில் ஆன்ஃபி (Onfy) என்ற மருந்து நிறுவனத்தையும், ஐரோப்பாவில் ஜூம்பே எனும் ஃபின்டெக் சேவை, ஜூம் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ஜூம்-ப்ரோ என்ற மொத்த வியாபார பிளாட்ஃபார்ம் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்திவருகிறது. 2022 ஆம் ஆண்டு ஜூம் நிறுவனம் உலகளவில் 400 மில்லியன் பதிவு செய்த பயனர்களை எட்டியது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: E-commerce, Online shopping