ஜான்சன்ஸ் பேபி பவுடரில் புற்று நோய் ஏற்படுத்தும் வேதிப்பொருள் இருந்தது அந்த நிறுவனத்திற்கு 10 வருடங்களுக்கு முன்பாகவே தெரியும் என ரியூட்டர்ஸ் செய்தி வெளியிட்டது. இதையடுத்து வெள்ளிக்கிழமை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் 32,364 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை இழந்தது.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பவுடரில் புற்றுநோய் ஏற்படுத்த கூடிய வேதிப்பொருட்கள் இருப்பதாக நீண்ட காலமாகவே புகார்கள் எழுந்து வந்தன. ஆனால் பவுடரில் அப்படி ஏதுமில்லை என நிறுவனம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்துவந்தது.
2017-ம் ஆண்டு ப்ளும்பெர்க் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் ஜான்சன் & ஜான்சன் பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் ஃபைபர் கலப்படங்கள் இருந்தது. அது புற்றுநோயை ஏற்படுத்தும் என்றும் கட்டுரை வெளியிட்டது.
ஜான்சன் & ஜான்சன் பவுடரை பயன்படுத்தி தங்கள் குழந்தைகள் புற்றுநோய் பாதிப்படைந்ததாக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வந்தது. இந்த வழக்களை விசாரித்து வந்த அமெரிக்க நீதிமன்றம் ஜூன் மாதம் 400 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு வந்த பிறகும் ஜான்சன் & ஜான்சன் பவுடரில் புற்றுநோய் ஏற்படுத்தும் வேதிப்பொருள்கள் ஏதுமில்லை என மறுத்து வந்தது. ஆனால் சென்ற வாரம் ரியூட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில் பவுடரில் புற்று நோய் ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் இருந்தது 10 ஆண்டுக்கு முன்பாகவே ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்குத் தெரியும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பங்குகள் 11 சதவீதம் சரிந்து. அதன் மதிப்பு 45 பில்லியன் டாலர் (ரூ.32,364 கோடி) என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பார்க்க: அவமானத்தில் செவிலியர் தற்கொலை... நடந்தது என்ன?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Johnson and johnson