மிகையான வருமானம்... ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்துக்கு ₹230.4 கோடி அபராதம்...!

சுமார் 178 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைத்தது.

மிகையான வருமானம்... ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்துக்கு ₹230.4 கோடி அபராதம்...!
ஜான்சன் & ஜான்சன்
  • News18
  • Last Updated: December 27, 2019, 6:21 PM IST
  • Share this:
தேசிய மிகை லாபத் தடுப்பு ஆணையம் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்துக்கு மிகைப்படியாக வருமானப் பணத்தை 3 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் சில தயாரிப்புகளுக்கு ஜிஎஸ்டி வரி முறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், வரி விலக்கு செய்யப்பட்ட பொருட்களுக்கு விலையைக் குறைக்காமல் அதிகப்படியாக லாபம் ஈட்டிய குற்றத்துக்காக ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய மிகை லாபத் தடுப்பு ஆணையத் தலைவர் பி.என்.ஷர்மா இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டுள்ளார். ஆண்டுக்கு 18 சதவிகித வட்டி என்ற கணக்கில் 230.4 கோடி ரூபாயை நுகர்வோர் நல வாரியத்தில் அபராதத் தொகையாக வட்டியுடன் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


கடந்த 2017-ம் ஆண்டு சுமார் 178 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைத்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: மாருதி முன்னாள் எம்.டி. மீது வங்கி கடன் மோசடி வழக்கு
First published: December 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்