Home /News /business /

மீண்டும் பவுடர் உற்பத்தியைத் தொடங்கிய ‘ஜான்சன் & ஜான்சன்’!

மீண்டும் பவுடர் உற்பத்தியைத் தொடங்கிய ‘ஜான்சன் & ஜான்சன்’!

ஜான்சன் & ஜான்சன்

ஜான்சன் & ஜான்சன்

நாடு முழுவதிலும் இருந்து ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் மாதிரிகள் திரும்பப் பெறப்பட்டு அரசு சோதனை செய்து வந்தது.

  • News18
  • Last Updated :
ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் சோதனை முடிவில் ஆஸ்பெஸ்டாஸ் இல்லை இன்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்தியத் தொழிற்சாலைகளில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கியது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரில் புற்று நோய் உண்டாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் உள்ளதாகச் சர்ச்சைகள் எழுந்ததை அடுத்து உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது.

மறுபக்கம் நாடு முழுவதிலும் இருந்து ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் மாதிரிகள் திரும்பப் பெறப்பட்டு அரசு சோதனைக்கு உட்படுத்தியது.

வியாழக்கிழமை அரசுக்குக் கிடைத்த சோதனை முடிவு அறிக்கையில் புற்று நோய் உண்டாக்கக் கூடிய ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் இல்லை என்று தெரிய வந்தது.

எனவே இந்திய அரசு தலைமையிலான விசாரணை ஆணையம் தொழிற்சாலைகளில் மீண்டும் பவுடரை உற்பத்தி செய்ய அனுமதி அளித்துள்ளது” என்று ஜான்சன் & ஜான்சன் தெரிவித்துள்ளது.

ஜான்சன் & ஜான்சனுக்கு மும்பையில் உள்ள பாடி மற்றும் முலூண்டு பகுதிகளில் பேபி பவுடர் தயாரிப்பதற்கான தொழிற்சாலைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:

Tags: Johnson and johnson

அடுத்த செய்தி