ஜியோமார்ட் (JioMart) நிறுவனம் வாட்ஸ் அப் செயலி (Whatsapp) வாயிலாக காய்கறி, மளிகை பொருட்கள் போன்றவற்றின் டெலிவரியில் ஈடுபடவுள்ளது.
மெடா (Meta) நிறுவனம் ‘இந்தியாவுக்கான எரிபொருள் 2021” என்ற நிகழ்ச்சியை இன்று இணைய வழியில் நடத்தியது. இதில் ‘சில்லரை வணிகத்தின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ஜியோ (jio), ஜியோ மார்ட் (jio mart) நிறுவன இயக்குனர்களான ஈஷா மற்றும் ஆகாஷ் அம்பானி, மெடா நிறுவனத்தின் மார்னே லெவைனுடன் கலந்துரையாடினர்.
அப்போது வாட்ஸ் அப் வாயிலாக ஜியோ மார்ட்டில் காய்கறி, மளிகை பொருட்களை ஆர்டர் செய்வது தொடர்பாக இருவரும் செயல்முறை ஆற்றினர். வாட்ஸ் அப் செயலில் tap and chat என்ற வசதி மூலம் வாடிக்கையாளர்கள் மளிகை பொருட்களை ஆர்டர் செய்யலாம். டெலிவரி முற்றிலும் இலவசம் மற்றும் குறைந்தபட்ச ஆர்டர் தொகை என எதுவும் கிடையாது.
வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் செயலி மூலம் தங்களது ஷாப்பிங் பட்டியலை நிரப்பிக்கொள்ளலாம். ஜியோமார்ட் செயலி மூலமோ கேஷ் ஆன் டெலிவரி மூலமாக பொருட்களுக்கான தொகையை செலுத்தலாம்.
இதையும் படிங்க: Reliance Jio: ரூ.1க்கு ரீசார்ஜ் பிளான் அறிமுகம் - ஜியோ அசத்தல்
,வாட்ஸ்அப் மூலம் ஜியோமார்ட் அனுபவம் என்பதை மிகவும் எளிமையாகச் சொன்னால் 'உரையாடல்' பாணியிலானது. WhatsApp மிகவும் எளிமையானது மற்றும் பயன்படுத்த எளிதானது, எனவே பொருட்களை ஆர்டர் செய்யும் போது வாடிக்கையாளருக்கு சிரமம் இல்லை. தொழில்நுட்பத்திற்கான தடைகள் இயற்கையாகவே அகற்றப்படுகின்றன. டிஜிட்டல் ஷாப்பிங் என்பது இப்போது வாட்ஸ்அப் வழியாக ஜியோமார்ட்டுக்கு செய்தி அனுப்புவதற்கான நீட்டிப்பாகும், மேலும் இவை அனைத்தும் சிரமமின்றி ஓரிரு படிகளில் கவனித்துக் கொள்ளப்படுகின்றன. உண்மையில், இது நுகர்வோர் புரட்சி, என்று ஆகாஷ் அம்பானி கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aakash ambani, Isha Ambani, JioMart, WhatsApp