அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக ஜெயண்ட் நிறுவனங்களையும் விஞ்சிவிடும் அளவுக்கு ஜியோமார்ட் டிஜிட்டல் என்ற ரிலையன்ஸ் நிறுவனம் ஸ்மார்ட் போன்கள் மற்றும் மின்னணு பொருட்கள் வர்த்தகத்தில் இறங்கவுள்ளது.
மளிகைப் பொருட்கள் முதல் ஆடை உள்ளிட்ட பேஷன் நுகர்பொருட்களின் இ-காமர்ஸ் வர்த்தகத்தில் வலுவாக இருக்கும் ரிலையன்ஸ் தற்போது மின்னணுப் பொருட்கள் வர்த்தகத்தில் கவனம் செலுத்துகிறது.
இது தொடர்பாக https://the-ken.com/ இணையதளத்தில் வெளியான செய்திக் கட்டுரையில் கூறியுள்ளதாவது:
மின்னணு வர்த்தகத்தில் அமேசான், பிளிப்கார்ட் ஆதிக்கம் நிலவி வருகிறது. ரிலையன்ஸ் தற்போது ஜியோமார்ட் டிஜிட்டல் மூலம் அமேசான், பிளிப்கார்ட் வர்த்தகத்தை முறியடித்து விஞ்சும் திட்டத்தில் இறங்கியுள்ளது.
தங்களுடைய புதிய ஆன்லைன் வர்த்தக ஜியோமார்ட் டிஜிட்டல் வர்த்தகத்தில் புதிய இணைப்பாக 8,000 புதிய ஸ்டோர்களை இந்தியா முழுதும் திறக்கவுள்ளது. இது கிரானா ஸ்டோர்கள் போல் செயல்படும்.
அதாவது ரிலையன்ஸ் டிஜிட்டலுடன் சேர்ந்து மொபைல் போன் சில்லரை வர்த்தகமும் இணைந்து மின்னணு வர்த்தகத்தில் கொடிநாட்ட முனைந்துள்ளது ரிலையன்ஸ்.
ரிலையன்ஸின் ஜியோமார்ட் தன் ஈ-காமர்ஸ் மளிகைப் பொருட்கள் வர்த்தகத்தில் நாளொன்றுக்கு ஏற்கெனவே 5 லட்சம் ஆர்டர்களை பெற்று வருகிறது. இதன் மூலம் முந்தைய வர்த்தகப் போட்டியாளரான பிக்பேஸ்கட்டின் அன்றாட ஆர்டர்களான 2,83,000 ஆர்டர்கள் என்பதைத் தாண்டி சென்றது ஜியோமார்ட் வர்த்தகம்.
ரிலையன்ஸின் ஆன்லைன் ஜவுளி மார்ட்டான ஏஜியோ ஏற்கெனவே வால்மார்ட்டின் மிண்ட்ராவுக்கு எதிராக பெரிய அளவில் எழுச்சிபெற்று வருகிறது.
இப்போது ஜியோ அறிமுகமாகி 5 ஆண்டுகள் சென்று விட்டன. இது ரிலையன்ஸின் தற்போதைய ஊடுருவலுக்கு நடைமேடை அமைத்துக் கொடுத்துள்ளது. இது அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தகத்துக்கு சவால் அளிக்கும் மின்னணு பொருட்கள் வர்த்தகமாகும். மலிவு விலையில் ஸ்மார்ட் போன் செப்டம்பர் மாதம் அறிமுகமாகிறது. இது நிச்சயம் ஒரு கேம் சேஞ்சர் என்கிறது ரிலையன்ஸ் நிறுவனம்.
இந்த புதிய ஜியோ போன் அறிமுகம் பற்றி அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில் எலெக்ட்ரானிக்ஸ் வர்த்தகத்தில் ஸ்மார்ட் போன்களையும் உள்ளடக்கிய பெரிய மின்னணு வர்த்தகத்தை ஆஃப் லைனில் உருவாக்கி இந்தியா முழுதும் 8,000 மார்ட்களை திறக்கவுள்ளது ரிலையன்ஸ். இந்த புதிய ஸ்மார்ட் போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் நுகர்பொருள் வர்த்தகம் ஜியோமார்ட் டிஜிட்டல் என்ற பெயரில் செயல்படவுள்ளது.
ஸ்மார்ட் போன் சில்லரை விற்பனைக்காக ஜியோமார்ட் டிஜிட்டல் ஏற்கெனவே சாம்சங், ஒன்பிளஸ், மைக்ரோமாக்ஸ், நிறுவனங்களுடன் ஏற்கெனவே ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இப்போது ஜியோபோன் நெக்ஸ்ட் மூலம் எலெக்ட்ரானிக்ஸ் வர்த்தகத்தில் பெரிய நிறுவனங்களுக்கு பெரிய சவால் அளிக்க முனைந்துள்ளது ரிலையன்ஸ்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jio, Reliance Digital, Reliance Jio, Reliance Retail