ஜியோ: வீட்டில் பணிபுரிவோர் வசதிக்காக அதிரடி சலுகை அறிவிப்பு..!

போட்டி நிறுவனங்களில இதே தொகையை செலுத்தினால் ஓராண்டுக்கு தினசரி ஒன்றரை ஜிபி டேட்டா மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஜியோ: வீட்டில் பணிபுரிவோர் வசதிக்காக அதிரடி சலுகை அறிவிப்பு..!
ஜியோ
  • Share this:
வீட்டில் இருந்து பணிபுரிவோரின் வசதிக்காக முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஜியோ அதிரடி சலுகைகளை வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஜியோ வாடிக்கையாளர்கள் 151 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 30 ஜிபி டேட்டாவும், 201 ரூபாய்க்கு 40 ஜிபி டேட்டாவும், 251 ரூபாய்க்கு 50 ஜிபி டேட்டாவும் பெற முடியும். இதில், தினசரி டேட்டா அளவு நிர்ணயம் கிடையாது என்பதுடன் ரீசார்ஜ் செய்த ஒரு மாதத்திற்குள் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், ஓராண்டுக்கு செல்லுபடியாகக் கூடிய சலுகை திட்டத்தையும் ஜியோ அறிவித்துள்ளது. 2 ஆயிரத்து 399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாட்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா வீதம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஜியோவுடன் ஒப்பிடுகையில் அதன் போட்டி நிறுவனங்களில இதே தொகையை செலுத்தினால் ஓராண்டுக்கு தினசரி ஒன்றரை ஜிபி டேட்டா மட்டுமே பயன்படுத்த முடியும்.


கொரோனா ஊரடங்கால் பெரும்பாலானோர் வீடுகளில் இருந்தே பணியாற்றத் தொடங்கியுள்ள நிலையில், குறைந்த செலவில் அதிக பலனளிக்கக் கூடிய ரீசார்ஜ் சலுகைகளை ஜியோ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also see...
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
First published: May 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading