உலகின் 5-வது வலுவான பிராண்ட் 'ஜியோ'

ஜியோ

2016ல் ஆரம்பிக்கப்பட்ட ஜியோ நிறுவனம் உலகின் முன்னணி நிறுவனங்களான அமேசான், ஆப்பிள், டிஸ்னி நிறுவனங்களை விட வலுவான பிராண்ட் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

 • Share this:
  உலகின் 5வது வலுவான பிராண்ட்டாக ஜியோ உள்ளதாக brand finance என்ற சர்வதேச நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் சீனாவின் வீ சேட் முதலிடம் பிடித்துள்ளது.

  இத்தாலியின் பெராரிக்கு 2ம் இடமும், ரஷ்யாவின் Sber நிறுவனத்துக்கு 3ம் இடமும், அமெரிக்காவின் coco cola நிறுவனத்துக்கு 4ம் இடமும், ஜியோவுக்கு 5ம் இடம் கிடைத்துள்ளது. 2016ல் ஆரம்பிக்கப்பட்ட ஜியோ நிறுவனம் உலகின் முன்னணி நிறுவனங்களான அமேசான், ஆப்பிள், டிஸ்னி நிறுவனங்களை விட வலுவான பிராண்ட் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

  Brand finance நிறுவனம் ஜியோவுக்கு 100க்கு 91.7 புள்ளிகளையும், தரத்தின் அடிப்படையில் AAA+ என்ற மதிப்பையும் அளித்துள்ளது. உலகின் வலுவான டாப் 10 பிராண்டுகளில் இடம்பிடித்துள்ள ஒரே இந்திய நிறுவனம் ஜியோ என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Vijay R
  First published: