Home /News /business /

Jio : ரூ.499 ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சேவை!

Jio : ரூ.499 ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சேவை!

ஜியோ ரீசார்ஜ்

ஜியோ ரீசார்ஜ்

jio recharge: ஜியோவின் ரூ. 499 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான ஒரு வருட சந்தாவை வழங்குகிறது

    ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல்  உள்ளிட்ட டெலிகாம் ஆபரேட்டர்கள் சமீபத்தில் தங்களது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தின. இதனால் சில பிரபலமான திட்டங்களின் சேவை நிறுத்தப்பட்டது அல்லது புதிய குறைக்கப்பட்ட சலுகைகளுடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அணுகல் போன்ற புதிய நன்மைகளுடன் பிரபல ரூ.499 திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

    தற்போது இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ரிலையன்ஸின் தொலைத்தொடர்பு பிரிவால் வழங்கப்படும் மலிவான திட்டமாகும். மேலும் இது OTT இயங்குதள சந்தாக்களுடன் வருகிறது. அதாவது ஜியோவின் ரூ.499 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட மதிப்புள்ள Disney + Hotstar மொபைல் சந்தாவை வழங்குகிறது. ஜியோவின் ரூ. 499 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் முதலில் ஆகஸ்ட் 2021 இல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த திட்டம் டிசம்பரில் திருத்தப்பட்டு மாதம் ரூ. 601 என உயர்ந்தது.

    ஆரம்பத்தில் TelecomTalk அறிவித்தபடி, ஜியோ அதன் பிரபலமான ரூ. 499 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் கடந்த மாதம் முதல் நிறுத்தப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. தற்போது இணையதளத்தில் உள்ள விவரங்களின்படி, ரூ. 499 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் தினசரி 2ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 28 நாட்கள் வாலிடிட்டி என்ற நன்மைகளுடன் கிடைக்கும். மேலும் ஒரு நாளின் டேட்டா வரம்பு முடிந்ததும், வாடிக்கையாளர்கள் 64kbps டேட்டா வேகத்தை மட்டுமே பெறுவார்கள். இந்த ப்ரீபெய்டு திட்டத்தின் மற்ற நன்மைகளில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச SMS ஆகியவை அடங்கும். இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் MyJio செயலியிலும் பட்டியலிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க.. 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு.. பேங்கில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் முதலில் செய்ய வேண்டிய வேலை இதுதான்!

    இது கிரிக்கெட் திட்டங்களின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், ஜியோவின் ரூ. 499 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான ஒரு வருட சந்தாவை வழங்குகிறது. பொதுவாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் மொபைல் மட்டும் சந்தாவை தனியாக பெற ஆண்டுக்கு ரூ. 499 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் இதனுடன், வாடிக்கையாளர்கள் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றின் வழக்கமான சந்தாவையும் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த டிசம்பர் மாதம் தான், ஜியோ தனது ரூ.499 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை திருத்தியதோடு அதன் விலையை ரூ. 601 ஆக உயர்த்தியது. அதோடு, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாக்களை வழங்கும் அனைத்து ரீசார்ஜ் திட்டங்களின் விலையைyum ஜியோ உயர்த்தியது. அதன்படி ரூ. 666 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம், 56 நாட்கள் வாலிடிட்டியுடன் ரூ.799 ஆக உயர்த்தப்பட்டது. அதேபோல், ரூ. 888 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் இப்போது 84 நாட்கள் வாலிடிட்டியுடன் ரூ.1,066 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி அதிவேக டேட்டாவுடன் கூடுதல் 5ஜிபி டேட்டாவுடன் வழங்கப்படுகிறது.

    இதையும் படிங்க.. ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் இவை தான்!

    கடந்த டிசம்பரில் ஜியோ திருத்திய மற்ற இரண்டு திட்டங்களில் ரூ. 2,599 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமும், ரூ. 549 விலை கொண்ட டேட்டா ஒன்லி ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமும் அடங்கும். இவை இரண்டும் இப்போது முறையே ரூ. 3,119 மற்றும் ரூ. 659 என உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 3,119 ரீசார்ஜ் பிளான் 365 நாட்கள் வாலிடிட்டியுடனும், ரூ. 659 பிளான் மற்றும் 56 நாட்கள் வாலிடிட்டியுடனும் கிடக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Jio, Recharge Plan

    அடுத்த செய்தி