ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய ப்ரீபெய்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டங்களுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் (Disney + Hotstar) ப்ரீமியம் திட்டத்துக்கான ஓராண்டு சப்ஸ்கிரிப்ஷன் இலவசமாக வழங்கப்படுகிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இரண்டு புதிய திட்டங்களுக்கும் ரூ.1,499 மற்றும் ரூ.4,199 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், வழக்கம்போல இலவச வாய்ஸ் கால் மற்றும் டேட்டா பிளான்கள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன.
டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் நீங்கள் ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் கொண்டவர் என்றால், உங்களுக்கு 4கே ரிசொல்யூஷன் தரத்தில் வீடியோக்களை பார்க்க முடியும். இது மட்டுமல்லாமல் மொபைல், லேப்டாப், டேப்லட் மற்றும் டிவி ஆகிய 4 டிவைஸ்களில் ஒரே சமயத்தில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஜியோ ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு திட்டம் பொருந்தும்.
இதையும் படிங்க.. பென்சன் வாங்குபவர்கள் கவனத்திற்கு.. வரும் பிப்ரவரி 28ம் தேதிக்குள் இதை செய்திருக்க வேண்டும்!
ஜியோ நிறுவனம் இந்த வாரத்தில் அறிவித்துள்ள அந்த இரண்டு திட்டங்கள் குறித்த முழுமையான விவரங்களை இங்கே பார்க்கலாம்.
ஜியோ ரூ.1,499 பிளான், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனுடன்
ஜியோவின் ரூ.1,499 ப்ரீபெய்டு திட்டத்தின் மூலமாக உங்களுக்கு ரூ.719 மதிப்பிலான இலவச ப்ரீபெய்டு திட்டங்களும் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் இந்த ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்குமான இலவச வாய்ஸ் கால் போன்ற சேவைகள் வழங்கப்படும். இது மட்டுமல்லாமல் நாளொன்றுக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ சூட் ஆப்களுக்கான சப்ஸ்கிரிப்ஷன் ஆகியவை கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கான வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதே சமயம், இந்த ப்ளானுடன் உங்களுக்கு ஆட் ஆன் பேக்கேஜ்ஜாக கிடைக்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் என்பது ஓராண்டு வேலிடிட்டி கொண்டதாகும்.
இதையும் படிங்க.. Fixed Deposit திட்டத்தில் முதலீடு செய்ய விருப்பமா? நீங்கள் இந்த வங்கிகளுக்கு செல்வது பெஸ்ட் சாய்ஸ்!
ஜியோ ரூ.4,199 பிளான், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனுடன்
வாடிக்கையாளர்களுக்கு நீண்ட கால வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா மற்றும் கால் சேவைகளை வழங்குவதாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது. ரூ.1,499 திட்டத்தில் வழங்கப்படும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ப்ரீமியம் ஓராண்டு சப்ஸ்கிரிப்ஷன் இந்தப் பிளானிலும் உங்களுக்கு கிடைக்கும். அதே சமயம்,
ப்ரீபெய்டு மொபைல் சேவைகள் உங்களுக்கு ஓராண்டு வேலிடிட்டி கொண்டதாக இருக்கும்.
ரூ.4,199க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. வேலிடிட்டி காலத்தில் தினசரி உங்களுக்கு 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்களுக்கான இலவச சப்ஸ்கிரிப்ஷன் ஆகிய பலன்கள் கிடைக்கும். ஒரே ரீசார்ஜ் செய்து ஆண்டு முழுவதுக்குமான பலன்களை பெற நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்தத் திட்டம் உதவிகரமானதாக இருக்கும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.