சமீபத்தில் அதிவேக ஜியோ 5 ஜி இணையச் சேவை தமிழ்நாட்டின் திருப்பூர் உட்பட 16 நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்தியாவில் மொத்தம் 134 நகரங்களில் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்த நிலையில் பிராண்ட் ஃபைனான்ஸ் என்ற நிறுவனம் குளோபல் 500 - 2023 என்ற பெயரில் உலகின் மதிப்புமிக்க மற்றும் வலுவான பிராண்ட்கள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இது மார்கெட் ஷேர், நற்பெயர், சலுகை, முயற்சி, பிடிமானம், பிரைஸ் பீரிமியம் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
இதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய அளவில் வலுவான பிராண்டாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் உலக அளவில் 9 வது இடத்தையும் பிடித்திருக்கிறது. இதில் கோகோ கோலா, அக்சென்சர், போர்ஸ், கூகுள், யூடியூப் இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்கள் முதல் 10 இடங்களை பிடித்திருக்கின்றன.
மேலும் Guardianship Index 2023 அறிக்கையின்படி சிறந்த சிஇஓ பட்டியலில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்திய அளவில் முதலிடத்திலும், உலக அளவில் 2-வது இடத்தையும் பிடித்துள்ளார். nvidia சிஇஒ ஜேன்சன் முதலிடத்தில் உள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.