ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, பங்குதாரர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் லட்சக்கணக்கான 2 ஜி செல்போன் பயன்பாட்டாளர்கள் இன்னும் இணையவசதியை பயன்படுத்தாமல் உள்ளதை குறிப்பிட்டுள்ளார்.
அவர்களை 2 ஜியில் இருந்து 4 ஜி வசதிக்கு மாற்ற ஜியோவிற்கு பெரும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2 ஜி வசதியை பயன்படுத்தி வந்த 10 கோடி பேர், கடந்த 2 ஆண்டுகளில் ஜியோ போன் மூலம் 4 ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
38 கோடியே 75 லட்சம் பேர் ஜியோ மூலம் செல்போன் இணைய சேவையை பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.