Home /News /business /

Glance நிறுவனத்தில் 200 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் Jio

Glance நிறுவனத்தில் 200 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் Jio

ஜியோ- கிளான்ஸ்

ஜியோ- கிளான்ஸ்

Jio investment in glance: கிளான்ஸ் நிறுவனத்தில் ஜியோ பிளாட்ஃபார்ம் 200 மில்லியன் டாலரை முதலீடு செய்யவுள்ளது. ஜியோ நிறுவனத்தை தங்களது பயணத்தில் ஒரு கூட்டாளராக பெற்றதற்கு மிகவும் பெருமைபடுகிறேன் என கிளான்ஸ் நிறுவனர் நவீன் திவாரி (Naveen tewari) கூறியுள்ளார்

மேலும் படிக்கவும் ...
  ரிலையன்ஸ் குழுமத்தின் ஓர் அங்கமான ஜியோ நிறுவனம் கிளான்ஸ் (Glance) நிறுவனத்தில் 200 மில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளது.

  ஸ்மார்ட் மொபைல்களில் ஸ்கீரின் லாக் செய்யப்பட்டிருந்தாலும், அதில் பல்வேறு புகைப்படங்களும் அதன் கீழ் அந்த புகைப்படம் தொடர்பான செய்திகளும் இடம் பெற்றிருப்பதை நாம் பார்த்திருப்போம். இவ்வாறு மொபைலின் தொடுதிரை லாக் செய்யப்பட்டிருந்தாலும் இணைய சேவையை பயன்படுத்தும் வசதியை வழங்கி வரும் நிறுவனங்களில் ஒன்றுதான் தான் கிளான்ஸ்( Glance). 2019ம் ஆண்டு சிங்கப்பூரில்  நவீன் திவாரி என்பவரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது ஆசியாவில் மட்டும் 400 மில்லியனுக்கு அதிகமான மொபைல் போன்களில் தங்களது சேவையை வழங்கி வருகிறது.

  இந்தியாவில் நாளொன்றுக்கு 163 மில்லியன் பயனாளர்களையும்  தென் கிழக்கு ஆசியாவில் 25 மில்லியன் பயனாளர்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது.  ஆங்கிலம், தமிழ்,இந்தி,  தெலுங்கு, மலையாளம், கன்னடம்,  பெங்காலி,  பஹாசா( இந்தோனேஷியா) தாய் (தாய்லாந்து) ஆகிய மொழிகளில்  விளையாட்டு,  ஃபேஷன், பொழுதுபோக்கு,  பயணம்,  விலங்குகள், உணவு, லைஃப் ஸ்டைல்,  ஆட்டோமொபைல்,  செய்தி, கேம்ஸ், உடற்பயிற்சி போன்ற பிரிவுகளில் சேவையை வழங்கி வருகிறது.

  இந்நிலையில், கிளான்ஸ் நிறுவனத்தில் ஜியோ பிளாட்ஃபார்ம் 200 மில்லியன் டாலரை முதலீடு செய்யவுள்ளது. இவ்வாறு திரப்படும் நிதியை ஆசியாவில் தங்களின் வளர்ச்சியை இரட்டிப்பாக்கவும் அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ, ரஷ்யா ஆகிய சர்வதேச சந்தைகளில்  தடம் பதிக்கவும் பயன்படுத்த கிளான்ஸ் முடிவு செய்துள்ளது.

  ஜியோ நிறுவனம் மட்டுமல்லாது, கூகுள், சிலிகான் வேலியை சேர்ந்த Mithril Capital ஆகிய நிறுவனங்களாலும் கிளான்ஸ் நிறுவனம் ஆதரிக்கப்படுகிறது. இந்த முதலீடு கிளான்ஸின் குறுகிய வீடியோ சமூக வலைதளமான  Roposoவின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.

  குறுகிய வீடியோ தளங்களுக்கான போட்டி அதிகரித்து வரும் நிலையில் இந்த முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் இதில் முன்னணியில் இருந்தாலும் ShareChat’s Moj, VerSe Innovation’s Josh  ஆகிய நிறுவனங்களும் தங்களின் பங்களிப்பை துரிதப்படுத்தியுள்ளன. அண்மையில்  ShareChat’ நிறுவனம் MX TakaTakவை 600 மில்லியன் டாலருக்கு வாங்கியிருந்தது குறிப்பிடத்தகக்து.

  முன்மொழியப்பட்ட முதலீட்டுடன் இணைந்து, Glance நிறுவனம், ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (Reliance Retail) உடன் வணிகக் கூட்டாண்மை ஏற்பாட்டிலும் நுழைந்துள்ளது, Glance இன் 'லாக் ஸ்கிரீன் பிளாட்ஃபார்ம்' ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன்களில் இடம்பெறவுள்ளது.

  இந்த முதலீடு தொடர்பாக ஜியோ இயக்குநர் ஆகாஷ் அம்பானி கூறுகையில், கிளான்ஸ் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் அபரிமிதமான வேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளது மற்றும் லாக் ஸ்கிரீனின்  இணையம், நேரடி உள்ளடக்கம், படைப்பாளிகளால் இயக்கப்படும் பொழுதுபோக்கு வர்த்தகம் மற்றும் கேமிங்கை அனுபவிப்பதற்காக  தனித்துவமான தீர்வை பயனர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த முதலீட்டின் உதவியுடன், Glance ஆனது உலகளவில் பல முக்கிய சந்தைகளில் தொடங்கவும், மில்லியன் கணக்கான ஜியோ பயனர்களுக்கு அனுபவத்தை விரிவுபடுத்தவும் எதிர்பார்க்கிறது. மேலும் இந்தியாவில் உள்ள நுகர்வோர்களுக்கு மிகவும் மேம்பட்ட மற்றும் அடுத்த நிலை தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

  எனது தொடக்க காலத்தில் முகேஷ் அம்பானி மிகப்பெரிய உத்வேகமாக இருந்தார். தற்போது அவரது  ஜியோ நிறுவனத்தை எங்களது பயணத்தில் ஒரு கூட்டாளராக பெற்றதற்கு மிகவும் பெருமைபடுகிறேன் என கிளான்ஸ் நிறுவனர் நவீன் திவாரி கூறியுள்ளார்.
  Published by:Murugesh M
  First published:

  Tags: Jio, Mobile phone, Reliance Jio

  அடுத்த செய்தி