Home /News /business /

Jio Offer : தினமும் 2.5 ஜிபி டேட்டா.. வருடம் முழுக்க வேலிடிட்டி! அசத்தலான ஜியோவின் புதிய திட்டம்!

Jio Offer : தினமும் 2.5 ஜிபி டேட்டா.. வருடம் முழுக்க வேலிடிட்டி! அசத்தலான ஜியோவின் புதிய திட்டம்!

ஜியோ

ஜியோ

Jio : தினமும் 2ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்கும், கூடுதல் டேட்டா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா போன்ற நன்மைகள் கிடைக்காது.

    முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் தொகுப்பின் கீழ் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஜியோ ரீசார்ஜ் ஆனது தினமும் 2.5 ஜிபி அளவிலான டேட்டாவுடன் சேர்த்து வரம்பற்ற வாய்ஸ் கால்களையும் மொத்தம் 365 நாட்களுக்கு (அதாவது 1 வருடம்) செல்லுபடியாகும்.

    ஜியோ அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.2,999 ஆகும். இந்த திட்டம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மை ஜியோ ஆப் வழியாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

    டேட்டா மற்றும் வாய்ஸ் கால் நன்மைகளை தவிர்த்து, இந்த புதிய ரூ.2,999 திட்டமானது ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. தவிர இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் யூசர்கள் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் போன்ற நிறுவனத்தின் சொந்த ஆப்களுக்கான அணுகலையும் பெறுவார்கள்.

    இந்தப் புதிய திட்டம் ஜியோவின் பிரபல ப்ரீபெய்ட் திட்டங்களான ரூ.3,119 மற்றும் ரூ.2,879 க்கு இடையில் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், இந்த இரண்டுத் திட்டங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நன்மைகளையே வழங்குகிறது. இவற்றின் வேறுபாட்டை பொறுத்தவரை, ரூ.3,119 ரீசார்ஜ் திட்டம், ரூ.499 மதிப்புள்ள டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை கூடுதல் கட்டணமின்றி இலவசமாக வழங்குகிறது. ஆனால் இந்த குறிப்பிட்ட நன்மை ரூ.2,879 ரீசார்ஜ் திட்டத்தில் கிடையாது.

    மற்ற நன்மைகளை பொறுத்தவரை, ரூ.3,119 ரீசார்ஜ், 365 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் ஜியோ ஆப்ஸ்களுக்கான, ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட இலவசத் தொகுப்பையம் வழங்குகிறது. மேலும் இது ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற வாய்ஸ் கால் தவிர, 10 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டா மற்றும் தினமும் 2 ஜிபி டேட்டாவை ஆண்டு முழுவதும் வழங்குகிறது.

    அடுத்த திட்டமான ரூ.2879 ஜியோ ப்ரீபெய்ட் திட்டமானது ரூ.3,119 திட்டத்தின் அதே நன்மைகளை வழங்குகிறது. ஆனால் தினமும் 2ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்கும், கூடுதல் டேட்டா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா போன்ற நன்மைகள் கிடைக்காது.

    ஜியோ யூசர்கள் மேற்கண்ட திட்டங்களின் கீழ், தங்களின் டெய்லி டேட்டா லிமிட்டை தீர்த்த பிறகும் கூட, அவர்களால் தொடர்ந்து 64Kbps என்கிற இணைய வேகத்தில் தொடர்ந்து இணையச் சேவைகளைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு யுபிஐ ஆட்டோ-பே சேவையை (UPI auto-pay service) வெளியிடத் தொடங்கி உள்ளது.

    இதையும் படிங்க.. ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் இவை தான்!

    இதன் பெயர் குறிப்பிடுவது போலவே, ஜியோ வாடிக்கையாளர்கள் மைஜியோ ஆப் மூலம் யுபிஐ ஆட்டோ பேமண்ட்டை செட் செய்யலாம். இது போஸ்ட்பெய்டு பில்களை கைமுறையாக செலுத்துவது அல்லது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செய்வது போன்ற வேலைகளின் போது உங்களுக்கு கைகொடுக்கும்.

    இந்த சேவையின் ஒரு பகுதியாக, ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் செக்யூரிட்டி பின்-ஐ உள்ளிட வேண்டிய அவசியமின்றி ரூ.5,000 வரை ஆட்டோ யுபிஐ ரீசார்ஜ் செய்யும் அம்சமும் அணுக கிடைக்கும்.

    மேலும் வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் திட்டங்களை மாற்றலாம் அல்லது அவர்கள் விரும்பும் பட்சத்தில் சேவையிலிருந்து விலகி கொள்ளலாம்.

    இதையும் படிங்க.. ஆன்லைனில் கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்வது எப்படி?

    மேலும் இதுபோன்ற வசதிக்கேற்ப கட்டணம் செலுத்தும் சேவையை அறிமுகம் செய்யும் இந்தியாவின் முதல் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஜியோ தான் என்பதிலும் சந்தேகம் வேண்டாம். இந்த சேவை என்பிசிஐ (NPCI) அதாவது நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா உடன் இணைந்து வெளியிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Jio, Mobile networks, Recharge Plan

    அடுத்த செய்தி