புத்தாண்டை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்காக பலவிதமான புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஜியோ நிறுவனம். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரீசார்ஜ் திட்டத்தின் படி, ஒரு நாளைக்கு 2.5 ஜிபி அளவிலான டேட்டாவும், அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கின்றன. இதன் வேலிடிட்டி 252 நாட்களாகும். வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தினை பெறுவதற்கு 2,023 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். மேலும் இவற்றில் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகிய செயலிகளைjio இலவசமாக பயன்படுத்தி கொள்ளும் வசதியும் யூசர்களுக்கு கிடைக்கும்.
இதற்கு இணையாக மற்றொரு புத்தாண்டு சலுகையாக 365 நாட்களுக்கான ரீசார்ஜ் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திலும் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்க பெறுகிறது. கூடுதலாக 2023ம் ஆண்டுக்கான புத்தாண்டு சலுகையாக 252 நாட்கள் வேலிடிட்டி உள்ள 64 ஜிபி டேட்டா அளவிலான திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது ஜியோ நிறுவனம். 365 நாட்கள் வேலிடிட்டி உள்ள திட்டத்தில் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி அளவிலான டேட்டா வீதம் ஒட்டுமொத்தமாக 912.5 ஜிபி அளவிலான டேட்டா யூஸர்களுக்கு வழங்கப்படுகிறது.
இவற்றிலும் அன்லிமிடெட் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோவின் அனைத்து செயலிகளுக்குமான சப்ஸ்கிரிப்ஷனும் வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் 23 நாட்களாக கூடுதல் வேலிடிட்டியுடன், 25 ஜிபி அளவிலான டேட்டாவும் மேலே கூறிய திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு திட்டங்களையும் ரீசார்ஜ் செய்துள்ள வாடிக்கையாளர்கள் அனைவருமே அன்லிமிடெட் 5 ஜி டேட்டாவை உபயோகித்துக் கொள்ள முடியும்.
இந்த இரண்டு திட்டங்களுமே குறிப்பிட்ட காலங்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புத்தாண்டு முடிந்த பின்பு இந்த திட்டம் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம். ஆனாலும் ஜியோவின் தரப்பில் இதைப்பற்றி எவ்வித அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இந்த புதிய ரீசார்ஜ் திட்டத்தினை பெற விரும்புபவர்கள் ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தள, மை ஜியோ செயலி மற்றும் மூன்றாம் தரப்பு ரீசார்ஜ் செயல்களின் மூலமாகவும் புத்தாண்டு சலுகை திட்டத்தினை ரீசார்ஜ் செய்து பெற முடியும்.
ஜியோ நிறுவனம் தற்போது நாடு முழுவதும் தங்களது 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தி விரிவுபடுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக எதிர்காலத்தில் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் மார்ச் மாதம் முடிவில் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும், தற்போதுள்ள கட்டணங்களிலிருந்து 10 சதவீத அளவு உயர்த்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jio, New Year 2023, Reliance Jio