ஜியோ நிறுவனம் ஏற்கனவே புத்தாண்டு சலுகையாக தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய வசதிகளுடன் கூடிய ரீசார்ஜ் பிளானை அறிமுகப்படுத்தி இருந்தது. தற்போது மீண்டும் ஒருமுறை புதிய ரீசார்ஜ் பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. தினசரி 2.5 ஜிபிஅளவிலான டேட்டாவுடன் கூடிய இரண்டு வெவ்வேறு வித ரீசார்ஜ் பிளான்களை அந்நிறுவனம் புதிதாக களமிறக்கி உள்ளது.
349 ரூபாயில் 2.5 ஜிபி உடன் ஒரு பிளானும், 899 ரூபாய்க்கு தினசரி 2.5 ஜிபி உடன் ஒரு பிளானையும் ஜியோ நிறுவனம் சேர்த்துள்ளது. இந்த திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் காலிங் வசதியும், இலவச எஸ்எம்எஸ் என்ற வசதியும் அளிக்கப்படும். மேலும் ஜியோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட செய்திகளுக்கான இலவச மெம்பர்ஷிப் வசதி அளிக்கப்படுகிறது.
அதில் ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ கிளவுட் மற்றும் ஜியோ செக்யூரிட்டி வாடிக்கையாளர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் 349 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யப்படும் பிளானின் வேலிடிட்டி 30 நாட்களாகும். இதுவே 899 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யப்படும் பிளானின் வேலிடிட்டி மூன்று மாதங்கள். ஏற்கனவே இதே போல இன்னொரு பிளான் பயன்பாட்டில் இருந்தாலும் இதன் வேலிடிட்டி நீண்ட நாட்கள் ஆகும்.
ரிலையன்ஸ் ஜியோ 349 ரூபாய் பிளானுக்கான விவரங்கள்:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தால் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ள தகவலின் படி ரூபாய் 349-க்கு அறிமுகப்படுத்தியுள்ள ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது தினசரி 2.5ஜிபி டேட்டாவுடன், அன்லிமிடட் வாய்ஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதியும் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். மேலும் இத்திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ ,சினிமா ஜியோ டிவி, ஜியோ கிளவுட், ஜியோ செக்யூரிட்டி ஆகிய செயலிகளை பயன்படுத்துவதற்கான வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே தகுதியான வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் ஜியோ 5ஜி வசதியும் அளிக்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ 899 ரூபாய் பிளானுக்கான விவரங்கள்:
ரூபாய் 899 ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான் திட்டத்தில் இணைவோர்களுக்கு 349 ரூபாய் திட்டத்தில் அளிக்கப்படும் அனைத்து சலுகைகளும் கிடைக்கும். இதில் ஒரே வேறுபாடு என்னவெனில் இதன் வேலிடிட்டி அளவு நீண்ட காலமாகும். ஒரு நாளைக்கு 2.5 ஜிபி என்ற டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் 100 எஸ் எம் எஸ் என்ற வசதிகளுடன் 90 நாட்கள் வரை வேலிடிட்டி வழங்கப்படுகிறது. அதுபோலவே ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ கிளவுட் மற்றும் ஜியோ செக்யூரிட்டி ஆகியவற்றுடன் அன்லிமிடெட் 5 ஜி டேட்டாவும் அளிக்கப்படுகிறது.
மேற்கொண்ட இரண்டு திட்டங்களைத் தவிர்த்து ரூ.2023-க்கான ரீசார்ஜ் திட்டமும் ஜியோவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திலும் மேற்கூறிய திட்டங்களில் உள்ள அனைத்து வசதிகளும் இருந்தாலும் 2023 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யப்படும் ப்ளானின் வேலிடிட்டி ஆனது 252 நாட்களாகும். தனது ஜியோ எண்ணிற்கு ரீசார்ஜ் செய்ய விரும்புபவர்கள் myjio ஆப்-பின் மூலமாகவும், ஜியோ வலைதளத்தின் மூலமாகவும் அல்லது மற்ற யுபிஐ செயலிகள் மூலமாகவும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jio, Jio 5G, Recharge Plan