Home /News /business /

Jio Independence Day Recharge Offer - 90 நாட்கள் வேலிடிட்டி, 2GB தினசரி டேட்டாவுடன் கூடிய பிளான் அறிமுகம்.!

Jio Independence Day Recharge Offer - 90 நாட்கள் வேலிடிட்டி, 2GB தினசரி டேட்டாவுடன் கூடிய பிளான் அறிமுகம்.!

ஜியோ

ஜியோ

Jio Independence Day Special Plan | ஜியோ நிறுவனம் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள ஜியோ யூஸர்களுக்கு தற்போது மற்றொரு மொபைல் ரீசார்ஜ் பேக்கை அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
ஆகஸ்ட் 15-ஆம் தேதியான இன்று நாட்டின் 75-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து இந்தியாவில் முன்னணி டெலிகாம் ஆப்ரேட்டர்களில் ஒன்றாக இருந்து வரும் ஜியோ நிறுவனம் கடந்த வார தொடக்கத்தில் சுதந்திர தின சலுகையாக ரூ.2,999-க்கான ப்ரீ-பெய்டு ரீசார்ஜ் பேக்கை 100% வேல்யூவுடன் அறிவித்தது. இந்த பிளான் யூஸர்களுக்கு ஒரு முழு வருடத்திற்கு தினசரி 2.5GB டேட்டாவை வழங்குகிறது, இது 365 நாட்கள் செல்லுபடியாகும்.

இந்நிலையில் ஜியோ நிறுவனம் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள ஜியோ யூஸர்களுக்கு தற்போது மற்றொரு மொபைல் ரீசார்ஜ் பேக்கை அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ரூ.750 மதிப்புள்ள புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பிளானில் ஜியோ நிறுவனம் தினசரி 2GB டேட்டா, அன்லிமிட்டட் கால்ஸ் மற்றும் பல நன்மைகளை வழங்குகிறது.

இந்த புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் தற்போது MyJio ஆப்பில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள ஜியோ யூஸர்கள் MyJio ஆப் சென்று இந்த ஆஃபரை பயன்படுத்தி கொள்ளலாம். எந்நேரமும் சோஷியல் மீடியாக்களை பயன்படுத்தும் ஜியோ யூஸர்களுக்கு இது ஏற்ற பிளானாக இருக்கும். ஏனென்றால் ஜியோ-வின் புதிய ரூ.750 ப்ரீபெய்ட் பிளான், மொத்தம் 90 நாட்களுக்கு 180GB டேட்டாவை வழங்குகிறது.



அதாவது இந்த பிளானின் மூலம் யூஸர்கள் ஒவ்வொரு நாளும் 2GB டேட்டா பெனிஃபிட்டை பெறுவார்கள். இந்த பிளான்வேறு எந்த நெட்வொர்க்கிற்கும் தடையின்றி பேசும் வகையிலான அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ்களை வழங்குகிறது. இந்த பிளானின் மற்ற சில நன்மைகளில் ஒரு நாளைக்கு 100SMS மற்றும் JioSaavan, JioCinema மற்றும் பிற Jio ஆப்ஸ்களுக்கான காம்ப்ளிமென்ட்ரி அக்சஸும் அடங்கும். இந்த பிளானின் வேலிடிட்டி பீரியட்டின் போது, தினசரி 2GB டேட்டா தீர்ந்துவிட்டால் யூஸர்கள் ஏதேனும் 4G டேட்டா வவுச்சர்களுடன் இந்த ஆஃபர் பிளானை இணைக்க முடியும்.

Also Read : 1,000 நகரங்களில் 5ஜி சேவையை வழங்க ஜியோ திட்டம்..

ஜியோ ஃபைபர் சலுகை:

Jio Har Ghar JioFiber ஆஃபரின் கீழ், புதிய ஜியோஃபைபர் கனெக்ஷனை பெறும் போது யூஸர்களுக்கு பூஜ்ஜிய நுழைவுச் செலவை (zero entry cost )வழங்கும். இச்சலுகை ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 16 வரை செல்லுபடியாகும், மேலும் இந்த தேதிகளுக்கு இடையே புதிய ஜியோ ஃபைபர் கனெக்ஷனை பெறுவோர் இன்டர்நெட் பாக்ஸ் மற்றும் செட்-டாப் பாக்ஸுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.



இதனிடையே ரூ.2,999 பிளானை பற்றி மேலே பார்த்தோம் அல்லவா. இதன் சில கூடுதல் நன்மைகள் பற்றி பார்க்கலாம். யூஸர்கள் ரூ.3,000 மதிப்புள்ள இலவச தொகுக்கப்பட்ட நன்மைகளையும் பெறுவார்கள் என்று ஜியோ கூறுகிறது. இதில் ரூ.499 மதிப்புள்ள Disney+ Hotstar மொபைலுக்கான சந்தா மற்றும் JioTV, JioSecurity, JioCloud மற்றும் JioCinema போன்ற பிற ஜியோ சேவைகளும் அடங்கும். தவிர ரூ.750 மதிப்புள்ள 75GB கூடுதல் டேட்டா, Ajio-வுக்கு ரூ.750 வவுச்சர், நெட்மெட்ஸுக்கு ரூ.750 வவுச்சர் மற்றும் இக்ஸிகோவுக்கு ரூ.750 வவுச்சர் உள்ளிட்டவையும் நன்மைகளில் அடங்கும்.
Published by:Selvi M
First published:

Tags: Independence day, Jio, Jio Fiber, Recharge Plan

அடுத்த செய்தி