வெற்றிகரமாக 5 ஆண்டுகளை நிறைவு செய்த ஜியோ!! - உலகின் முன்னணி நிறுவனங்களிடம் இருந்து குவியும் வாழ்த்து..

வெற்றிகரமாக 5 ஆண்டுகளை நிறைவு செய்த ஜியோ!! - உலகின் முன்னணி நிறுவனங்களிடம் இருந்து குவியும் வாழ்த்து..

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 5 ஆண்டு கால பயணத்தை நிறைவு செய்து 6ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி, உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் வரிசைகட்டி ஜியோ நிறுவனத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன.

  • Share this:
    நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜியோவின் வருக்கைக்கு பிறகு, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து போட்டி போட்டு, லாபத்தினை மறந்து பல சலுகைகளை அறிவித்து வருகின்றன. எனினும் ஜியோவுக்கு ஈடாக தங்களது சலுகைகளை மற்ற நிறுவனங்கள் கொடுக்க முடியவில்லை என்பதே உண்மை.

    செப்.5 2016ம் ஆண்டு தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவன வருகைக்கு பின்னர், நாட்டில் டேட்டா பயன்பாடு 1,300 சதவீம் அதிகரித்துள்ளது. அதேபோல், பிராட்பேண்ட் பயனர்களின் எண்ணிக்கையும் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

    கடந்த செப்.2016ம் ஆண்டில் பிராட்பேண்ட் பயனாளர்களின் எண்ணிக்கை 19.23 கோடியாக இருந்தது. அதுவே, தற்போது ஜூன் 2021ம் ஆண்டில் 79.27 கோடியாக அதிகரித்துள்ளது என டிராய் அறிக்கை தெரிவிக்கிறது. அதேபோல், டிசம்பர் 2016 முதல் மார்ச் 2021ம் ஆண்டு வரை, தனி நபர் மாத டேட்டா பயன்பாடு என்பது 873.63எம்.பியில் இருந்து, 12.33ஜிபி ஆக 1,303 சதவீதம் உயர்ந்துள்ளது.

    அதேபோல், செப்.2016ல் ஜியோ நிறுவனத்தின் செயல்பாடு தொடங்கியதில் இருந்து, டேட்டா செலவு என்பது 93 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதாவது, ஒரு ஜிபி டேட்டா ரூ.160ஆக இருந்தது, தற்போது ரூ.10.77 ஆக குறைந்துள்ளது என டிராய் அறிக்கை கூறுகிறது.

    ஜியோ நிறுவனம் டிஜிட்டல் பிளவை உடைத்து, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உண்மையான ஜனநாயகமாக்கலின் சகாப்தத்தை உருவாக்க உதவியுள்ளது. இந்த செயல்பாடானது ஒவ்வொரு இந்தியருக்கும் அதிகாரம் அளித்துள்ளது.

    மிக முக்கியமாக, ஜியோ நிறுவனம் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தி, அதனை அனைவருக்கும் எடுத்துச் சென்றுள்ளது என்று கூறலாம். உதாரணமாக, இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்துவபவர்களின் எண்ணிக்கை 2016ல் 20 கோடியாக இருந்தது, 2021ல் 42 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்டு உயர்ந்துள்ளது. அதேபோல், வாட்ஸ் அப் பயனர்களின் எண்ணிக்கையும் 2016ல் 19 கோடி பயனர்களாக இருந்தது, 2021ல் 39 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்டு உயர்ந்துள்ளது.

    ஆன்லைன் வணிகங்கள் வளர்ந்து வருகின்றன. இது இடைத்தரகர்களை தடுத்து, விலைகளை மலிவு செய்கிறது. இதுகுறித்து முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் கூறும்போது, நாட்டில் புதிய கால இணைய தொடக்கங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோவின் அபரிதமான வளர்ச்சியும் காரணம் என பாராட்டினார்.

    அதேபோல், உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரீட் ஹோஸ்டிங்ஸ், இந்தியாவில் ஸ்ட்ரீமிங் சேவைகளின் வெற்றிக்கு ஜியோவே காரணம் என பாராட்டினார். ஒவ்வொரு நாடும் இதேபோல் அதற்கென சொந்தமாக ஒரு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை கொண்டிருக்கு வேண்டும் என்று கூறினார்.

    இத்தனை பெருமைகளுக்கு உரிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது வெற்றிகரமாக தனது 5 ஆண்டு கால பயணத்தை நிறைவு செய்து 6ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி, கூகுள் இந்தியா, சோமேட்டோ, நெட்ஃபிளிக்ஸ், பேடிஎம் என உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் ஜியோ நிறுவனத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன.



    அந்தவகையில், எச்டிஎஃப்சி நிறுவனம் தனது வாழ்த்தில், தலை நிமிர்ந்து, வாழ்வது எப்படி என்பதை உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று புகழ்ந்துள்ளது.

    ஹாட்ஸ்டார் நிறுவனம், ஸ்கோர் என்ன? என்று கேட்ட காலம் கடந்து நேரலையில் கிரிக்கெட் போட்டியை பார்க்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. ஜியோ நிறுவனத்திற்கு வாழ்த்துக்குள் என்று தெரிவித்துள்ளது.

    இதேபோல், கூகுள், நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, போன்பே, அப்பல்லோ மருத்துவமனை, அசோக் லேலேண்ட், டிண்டர் இந்தியா, வூட், ஜி5, சாம்சங் இந்தியா, விவோ, ஓப்போ, டோமினோஸ் இந்தியா, சோனி லைவ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஜியோவின் 5வது ஆண்டு விழாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Esakki Raja
    First published: