• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • Jio-BP: ஜியோ-பிபி முதல் எரிபொருள் சில்லறை விற்பனை நிலையம் திறப்பு!

Jio-BP: ஜியோ-பிபி முதல் எரிபொருள் சில்லறை விற்பனை நிலையம் திறப்பு!

ஜியோ பிபி எரிபொருள் நிலையம்

ஜியோ பிபி எரிபொருள் நிலையம்

அடுத்த 20 ஆண்டுகளில் உலகில் வேகமாக வளரும் எரிபொருள் சந்தையாக  இந்தியா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஜியோ-பிபி மொபிலிட்டி நிலையங்கள் இந்த வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எண்ணெய் நிறுவனமான பிபி ஆகிய இரண்டும் இணைந்து ‘ஜியோ-பிபி’ என்ற பிராண்ட்டின் கீழ் எரிபொருள் சில்லறை விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளது. தரமான எரிபொருள்  கூடுதல் கட்டணம் இல்லாமல் விநியோகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) மற்றும் பிபியின் எரிபொருள் மற்றும் மொபிலிட்டியின் கூட்டு முயற்சியான ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி லிமிடெட் (RBML), இன்று தனது முதல் ஜியோ-பிபி பிராண்டட்  எரிபொருள் சில்லறை விற்பனை நிலையத்தை மஹாராஷ்டிராவின் நவி மும்பையில் உள்ள நவ்டேயில் தொடங்கியுள்ளது.

    கொரோனா பெருந்தோற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில் பல்வேறு அம்சங்களுடன் உலகத் தரமான சேவையை ஜியோ-பிபியின் எரிபொருள் நிலையங்கள் கொண்டுள்ளது.  இந்தியாவில் மொபிலிட்டி தீர்வுகளை மறுபரிசீலனை செய்யும் போது, ​​ஜியோ-பிபி பிராண்ட் ஒப்பிடமுடியாத மற்றும் தனித்துவமான வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது.

    ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 1400  எரிபொருள் நிலையங்களும் ஜியோ பிபி என்று பெயர்மாற்றம் செய்யப்படும் என்று இரு நிறுவனங்களும் கூட்டாக வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எரிபொருள் மற்றும் இயக்கத்திற்கான இந்தியாவின் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் உலகில் வேகமாக வளரும் எரிபொருள் சந்தையாக  இந்தியா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ-பிபி மொபிலிட்டி நிலையங்கள் இந்த வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.


    தரமான எரிபொருள், எலெக்ரிக் வாகனங்களுக்கான சார்ஜ் மையம், உணவு உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் நிலையம் என வாடிக்கையாளர்களுக்கான பலவிதமான சேவைகளை இந்த எரிபொருள் நிலையங்கள் கொண்டிருக்கும்.இந்தியா முழுவதும் உள்ள நுகர்வோர் வணிகங்களில் ரிலையன்ஸின் பரந்த இருப்பு மற்றும் ஆழமான அனுபவத்தைப் பயன்படுத்தி எரிபொருள்கள் மற்றும் இயக்கம் ஆகியவற்றில் முன்னணியில் இருப்பதற்கான இந்த கூட்டு முயற்சியானது நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    வழக்கமான எரிபொருளுக்குப் பதிலாக, நாடு முழுவதும் உள்ள ஜியோ-பிபி மொபிலிட்டி நிலையங்கள் கூடுதல் கட்டணமின்றி, தரமான எரிபொருளை வழங்கும். எரிபொருள் வழங்கலில் சர்வதேச அளவில் உருவாக்கப்பட்ட 'ஆக்டிவ்' தொழில்நுட்பம் இருக்கும், இது இன்ஜின்களை சுத்தமாக வைத்திருக்க உதவும் முக்கியமான என்ஜின் பாகங்களில் ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜியோ-பிபி அதன் மொபிலிட்டி ஸ்டேஷன்கள் மற்றும் பிற தனித்த இடங்களான மொபிலிட்டி பாயின்ட்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான  சார்ஜிங் நிலையங்கள் மற்றும் பேட்டரி மாற்றும் நிலையங்கள் ஆகியவற்றை அமைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



    பயணத்தின்போது வாடிக்கையாளர்களுக்கு வைல்ட் பீன் கஃபே மூலம் புத்துணர்வை பானங்களை வழங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் 24 மணி நேரமும் செயல்படும் இந்த கடையின் தினசரி தேவைப்படும் பொருட்கள், தின்பண்டங்கள் மற்றும் மிட்டாய்களை வழங்கும் பங்குதாரராக இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளரான ரிலையன்ஸ் ரீடெய்ல் உள்ளது. சர்வதேச  பிராண்ட் ஆன வைல்ட் பீன் கஃபே( Wild Bean Café) தனது புகழ்பெற்ற  காபி உடன் மசாலா சாய், சமோசா, உப்மா, பனீர் டிக்கா ரோல் மற்றும் சாக்லேட் லாவா கேக் போன்றவற்றையும் வழங்கும்.

    கெஸ்ட்ரோ நிறுவனத்துடன் இணைந்து வாகனங்களின் எண்ணெய் மாற்றும் மையங்களையும் தனது எரிபொருள் நிலையத்தில்  ஜியோ-பிபி அமைத்துள்ளது.  இங்கு இலவச வாகன சுகாதார சோதனை மற்றும் இலவச எண்ணெய் மாற்றும் சேவையை பயிற்சி பெற்ற நிபுணர்கள் மூலம் வழங்கவுள்ளது.எக்ஸ்பிரஸ் ஆயில் சேஞ்ச் கடைகளில் காஸ்ட்ரோல் லூப்ரிகண்ட் வாங்கும் ஒவ்வொரு இரு சக்கர வாகன வாடிக்கையாளரும் எந்த கட்டணமும் இன்றி எண்ணெய் மாற்ற சேவையைப் பெற முடியும்.



    ஜியோ-பிபி ஆனது எண்ட்-டு-எண்ட் ஆட்டோமேஷனை கொண்ட 'தரம் & அளவு' உத்தரவாதத்தை உறுதி செய்கிறது. மேலும், , இது ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஜியோ-பிபி மொபிலிட்டி நிலையங்களில் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் முழு மதிப்பை அளிக்கிறது.

    நிகரில்லா வாடிக்கையாளர் சேவை அனுபவத்தை வழங்குவதற்காக சந்தையின் நிலவரத்துக்கு ஏற்ப விலை மாற்றி அமைக்கப்படுவது,  உடனடி தள்ளுபடி, ஹாப்பி ஹவர் திட்டங்கள், நெட்வொர்க் முழுவதும் நெகிழ்வான மற்றும் சீரான டிஜிட்டல் கட்டணத்தை செயல்படுத்துதல் போன்ற தள்ளுபடிகள் தயாராக உள்ளன.

    ஜியோ-பிபி பற்றி:

    ஜியோ-பிபி என்பது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) மற்றும் பிபி இடையேயான இந்திய எரிபொருள்கள் மற்றும் இயக்கம் கூட்டு முயற்சியாகும். இந்தியாவில் மொபிலிட்டிக்கான தீர்வு வழங்குநராக மாறுவதற்கான பார்வையுடன், இந்த கூட்டு முயற்சியானது ஜியோ டிஜிட்டல் தளத்தின் மூலம் 21 மாநிலங்கள் மற்றும் அதன் லட்சக்கணக்கான நுகர்வோர்களில் ரிலையன்ஸின் இருப்பை மேம்படுத்தும். உயர்தர வேறுபட்ட எரிபொருள்கள், லூப்ரிகண்டுகள், சில்லறை விற்பனை மற்றும் மேம்பட்ட குறைந்த கார்பன் இயக்கம் தீர்வுகள் ஆகியவற்றில் தனது உலகளாவிய அனுபவத்தை பிபி நிறுவனம் கொண்டுவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: