5 வருட கால இடைவெளியில் நாட்டின் மிக பெரிய டெலிகாம் ஆப்ரேட்டராக மாறியுள்ளது ஜியோ. இந்த நிறுவனத்தின் பிளான்கள் ரீசார்ஜ்கள், வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் மெசேஜ்கள் போன்ற பலவற்றுடன் தொகுக்கப்பட்டுள்ளன. ஜியோ ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் மற்றும் ஜியோ ஃபோன் சப்ஸ்கிரைபர்கள் தங்கள் ஜியோ பேலன்ஸ் (Jio Balance), டேட்டா யூசேஜ், வேலிடிட்டி மற்றும் பலவற்றை சரிபார்க்க உதவும் சில சுலப வழிகளை இங்கே பார்க்கலாம்.
SMS அல்லது மிஸ்டு கால் மூலம் ஜியோ பேலன்ஸ் செக் செய்வது எப்படி?
நீங்கள் ஜியோ யூஸராக இருந்தால் உங்கள் பேலன்ஸ் பற்றி மிஸ்டு கால் மூலம் தெரிந்து கொள்ள விரும்பினால் 1299 என்ற நம்பருக்கு மிஸ்டு கால் கொடுக்கவும். உங்கள் மிஸ்டு காலை தொடர்ந்து ஜியோ நிறுவனம் SMS மூலம் உங்களுக்கு தேவையான விவரங்களை அனுப்பும். இதற்குப் பதில் நேரடியாக நீங்கள் SMS-ஐ பயன்படுத்தி பேலன்ஸை தெரிந்து கொள்ள விரும்பினால் 199-க்கு என டைப் செய்து SMS அனுப்பலாம். இதனை தொடர்ந்து டெக்ஸ்ட் மெசேஜ் பேலன்ஸ் மற்றும் வேலிடிட்டி போன்ற விவரங்களை பெறலாம்.
USSD கோட்ஸ்களை பயன்படுத்தி ஜியோ பேலன்ஸை செக் செய்வது எப்படி.?
ஜியோ பேலன்ஸ் மற்றும் வேலிடிட்டி உள்ளிட்ட பலவற்றை சரிபார்க்க உதவும் USSD குறியீடுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..
மெயின் பேலன்ஸ் இன்ஃபர்மேஷன் கோட்: *333#
இன்டர்நெட் பேலன்ஸ் இன்ஃபர்மேஷன் கோட்: *111*1*3#
காலர் ட்யூன் ஆக்டிவேஷன் கோட் : *333*3*1*1#
டிஆக்டிவேட் ஜியோ காலர் ட்யூன்: *333*3*1*2#
கால் மூலம் ஜியோ பேலன்ஸை செக் செய்வது எப்படி.?
ஆன்லைன் முறைகள் தவிர யூஸர்கள் தங்கள் ஜியோ பேலன்ஸை கால்ஸின் மூலமாகவும் செக் செய்து கொள்ளலாம்.
* ஜியோவின் கஸ்டமர் கேர் நம்பரான 18008899999 அல்லது 1991-ஐ டயல் செய்யவும்.
* அடுத்து இன்டராக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ் (IVR) மெனுவிலிருந்து உங்களுக்கு விருப்பமான மொழி ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
* பிளானின் டெய்லி டேட்டா பேலன்ஸ் மற்றும் வேலிடிட்டியை நீங்கள் கேட்கலாம்.
கிரெடிட் கார்டு வாங்க ஆசையா..? எஸ்பிஐ தரும் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!
* அதன் பின் நீங்கள் ரீசார்ஜ்கள் மற்றும் பிளான், கரண்ட் டேட்டா பேலன்ஸ் மற்றும் வேலிடிட்டி, ஜியோ ட்யூன் போன்றவற்றை பற்றியும் தெரிந்துகொள்ளலாம். கரண்ட் டேட்டா பேலன்ஸ் மற்றும் வேலிடிட்டி ஆப்ஷனுக்கு தொடர்புடைய கோடை அழுத்தி அவற்றை அறிந்து கொள்ளலாம்.
* ஜியோ பேலன்ஸை சரிபார்ப்பதைத் தவிர, பல்வேறு பிளான்கள் மற்றும் ஆஃபர்கள் , காலர் டியூன் பற்றிய தகவல்களைப் பெறலாம் அல்லது உங்களுக்கு இருக்கும் ஒரு சிக்கலை தீர்க்க கஸ்டமர் கேர் நிர்வாகியிடம் பேசலாம்.
MyJio App மூலம் ஜியோ பேலன்ஸை செக் செய்வது எப்படி.?
* MyJio App உங்களிடம் இல்லையென்றால் முதலில் டவுன்லோட் செய்து கொள்ளவும்
* உங்கள் ஜியோ நம்பர் மற்றும் OTP-ஐ பயன்படுத்தி ரிஜிஸ்ட்ரேஷன் ப்ராசஸை முடிக்கவும்
* பேலன்ஸ் விவரங்கள், கால், டேட்டா மற்றும் SMS மற்றும் பிளான் எக்ஸ்பைரி டேட் பற்றி தெரிந்துகொள்ள View Detail ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
* இப்போது ஆப்ஸின் ஹோம் ஸ்கிரீனில் உங்களின் 4G டேட்டா பேலன்ஸ் மற்றும் டாக் டைம் பேலன்ஸை பார்க்கலாம். ஜியோ டேட்டா பேலன்ஸ் பட்டனை கிளிக் செய்தால், நீங்கள் பயன்படுத்தும் டேட்டா நுகர்வு முறை (data consumption pattern) உங்களுக்கு காண்பிக்கப்படும்.
வருஷம் பொறந்த உடனே ஜனவரி மாதத்தில் மட்டுமே இத்தனை விடுமுறைகள்!
ஜியோ வெப்சைட் மூலம் பேலன்ஸ் செக் செய்வது எப்படி?
* Jio.com வெப்சைட்டிற்கு செல்லவும்
* மொபைல் ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் எண்ணைக் கொண்டு உள்நுழையவும். OTP தேவைப்படும் என்பதால் உங்கள் ஜியோ சிம் கொண்டிருக்கும் மொபைலை பக்கத்தில் வைத்திருக்கவும்
* பின் தோன்றும் ஃபாலோ-அப் பேஜ் உங்களின் தற்போதைய பிளானின் விவரங்கள், அதன் வேலிடிட்டி மற்றும் மீதமுள்ள டேட்டா மற்றும் கால் பெனிஃபிட்களை காண்பிக்கும். ஜியோ பேலன்ஸ் பற்றி விரிவாக அறிய, Check Usag-ஐ கிளிக் செய்யவும். ஜியோ பேலன்ஸ் விவரங்களுடன், உங்கள் இன்டர்நெட் பேக்கின் யூசேஜை நீங்கள் சரிபார்க்கலாம், ரீசார்ஜ் ஹிஸ்டரியை பார்க்கலாம் மற்றும் இணையதளத்தில் இருந்து இன்வாய்ஸ் ஹிஸ்ட்ரியை டவுன்லோட் செய்யலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.