முகப்பு /செய்தி /வணிகம் / மலிவு விலை ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களில் இனி இலவச SMS இல்லை!

மலிவு விலை ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களில் இனி இலவச SMS இல்லை!

telecom operators

telecom operators

மலிவு விலை திட்டங்களில் எஸ்.எம்.எஸ் சேவையை நீக்குவதாக தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அறிவித்திருப்பது வாடிக்கையாளர்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Last Updated :

ஜியோ, ஏர்டெல் மற்றும் Vi போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ. 100க்கு குறைவான ப்ரீபெய்டு பிளான்களில் எஸ்எம்எஸ் நன்மைகளை நீக்குவதாக அறிவித்துள்ளன. தொழில் ரீதியான நடைமுறையாக, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இது மொபைல் எண் போர்ட்டபிலிட்டி (எம்என்பி) போன்ற வசதிகள், எஸ்எம்எஸ் வசதியை குறைந்த ரீசார்ஜ் பிளான்கள் மூலம் பெற்றுவந்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். அத்துடன் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) உள்ளிட்ட சேவைகளுக்கான எஸ்எம்எஸ் வசதியும் பாதிக்க வாய்ப்புகள் உள்ளது.

கடந்த 2017ம் ஆண்டில், ஜியோ ரூ. 98 ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்தது, அதில் எஸ்எம்எஸ் ஒதுக்கீட்டை 100லிருந்து 300ஆக உயர்த்தியது. ஆனால் இந்த திட்டம் சில நாட்களுக்கு பின்னர் நீக்கப்பட்டது. பின்னர் மே 2021ல் ஜியோ அந்த திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியபோது, ​​எஸ்எம்எஸ் விருப்பத்தை மட்டும் நீக்கியிருந்தது.

Also Read:  'எலும்பை உடைத்துவிடுவேன்': கட்சியினர் முன் சக எம்.எல்.ஏவை மிரட்டிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ!

அதைத் தொடர்ந்து சில நாட்களுக்குப் பிறகு ஏர்டெல் மற்றும் Vi (வோடபோன் ஐடியா) நிறுவனங்களும் ஜூன் மாதத்தில் தங்களது குறைந்த பட்ஜெட் பிளான்களில் எஸ்எம்எஸ் விருப்பத்தை நீக்கியது. மேலும் ஜியோ, ஏர்டெல், மற்றும் Vi நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கான குறைந்த பட்ஜெட் ரீசார்ஜ் திட்டங்களில் அன்லிமிடெட் கால் அம்சங்கள் மற்றும் அதிவேக டேட்டாவை வழங்கியது.

ஜியோ தற்போது ரூ. 98 விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இந்த பிளானின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். மேலும் ரூ. 39 விலையில் மற்றொரு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமும் உள்ளது.

Also Read:   அரசியலுக்கே முழுக்கு.. எம்.பி பதவியும் ராஜினாமா. அதிரவைத்த பாஜகவின் பாபுல் சுப்ரியோ..

இதில் 1.4 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் அழைப்புகள் 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்த இரண்டு திட்டங்களும் ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 75 ப்ரீபெய்ட் திட்டத்தில் 50 எஸ்எம்எஸ் மற்றும் 3 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

Vi நிறுவனம் ரூ. 49 ப்ரீபெய்ட் திட்டத்தில் 100 எம்பி டேட்டா, ரூ. 38க்கான டாக்டைம் அம்சங்களை 28 நாட்களுக்கு வழங்குகிறது. ஜியோ போலல்லாமல், Vi கூடுதலாக உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புளுக்கு வினாடிக்கு 2.5 பைசா மட்டுமே எடுத்து கொள்கிறது. மறுபுறம், ஏர்டெல் சமீபத்தில் ரூ. 79 என்ற குறைந்த மாதாந்திர ரீசார்ஜை திட்டத்தை அறிமுகம் செய்தது. இது முன்னதாக ரூ. என்ற விலையில் கிடைத்தது. ரூ. 79 ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் ரூ. 64 டாக்டைம், 200 எம்.பி. டேட்டா, 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுக்கு நொடிக்கு ஒரு பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அனைத்து நிறுவனங்களும் எஸ்எம்எஸ் சேவையை நீக்க உள்ளனர். தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ நிறுவனங்கள் சராசரி வருவாயை (ARPU) அதிகரிக்க தங்கள் மலிவு விலை திட்டங்களில் எஸ்எம்எஸ் நன்மைகளை நீக்க உள்ளது. வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஸ்களை அனுப்ப விரும்பினால் கூடுதல் எஸ்எம்எஸ் பேக் உள்ள ரீசார்ஜ் திட்டங்களை தேர்ந்தெடுப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos

    இது குறித்து கருத்து தெரிவிக்க இந்திய செல்லுலார் சங்கம் (சிஓஏஐ) மறுத்துவிட்டது. தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களின் இந்த நடவடிக்கை, ஒரு எஸ்எம்எஸ் செய்தியை அனுப்ப வேண்டியிருப்பதால், வாடிக்கையாளர்கள் யுபிஐ போன்ற சேவைகளை பயன்படுத்த விரும்பும் நேரத்தில் மலிவு விலை திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    First published:

    Tags: Airtel, Idea, Reliance Jio, Vodafone