ஹோம் /நியூஸ் /வணிகம் /

புத்தாண்டை முன்னிட்டு ஜியோ, ஏர்டெல், வேடாஃபோன் - ஐடியா நிறுவனங்களில் ஓராண்டு சூப்பர் ஆஃபர்

புத்தாண்டை முன்னிட்டு ஜியோ, ஏர்டெல், வேடாஃபோன் - ஐடியா நிறுவனங்களில் ஓராண்டு சூப்பர் ஆஃபர்

டெலிகாம் நிறுவனங்கள்

டெலிகாம் நிறுவனங்கள்

ஓராண்டு வேலிடியுடன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானை தேர்ந்தெடுத்துக் கொள்ள நீங்கள் விரும்பினால் இது சரியான நேரமாக இருக்கும்.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

புத்தாண்டை முன்னிட்டு ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் பிளானில் பல்வேறு புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். முக்கியமாக ஒரு வருடம் வரை வேலிடிட்டி தரக்கூடிய பல்வேறு சலுகைகள் இதில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுடைய பணம் சேமிக்கப்படுவதுடன் அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் தொல்லையும் தவிர்க்கப்படுகிறது. ஓராண்டு வேலிடியுடன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானை தேர்ந்தெடுத்துக் கொள்ள நீங்கள் விரும்பினால் இது சரியான நேரமாக இருக்கும். ஏனெனில் அனைத்து நிறுவனங்களும் ஓராண்டுக்கான வேலிடிட்டியுடன் சிறப்பு சலுகைகளுடன் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ஜியோ ஆண்டு கட்டண ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்:

ரூபாய் 2545 பிளான்: 336 நாட்கள் வேலிடியுடன் 504 ஜிபி அளவிலான டேட்டாவுடன் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 1.5ஜிபி என்ற அளவில் 336 நாட்களுக்கு 504 ஜிபி டேட்டா வாடிக்கையாளருக்கு அளிக்கப்படுகிறது. இவற்றைத் தவிர யூஸர்களுக்கு அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் என்ற சலுகைகளும் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் ஜியோவின் ப்ரீமியம் சேவைகளான ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கான இலவச மெம்பர்ஷிப்பும் வழங்கப்படுகிறது.

ரூபாய் 2879 பிளான்:  இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி வீதம் 730ஜிபி அளவிலான டேட்டா வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் வேலிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் யூசர்களுக்கு அன்லிமிடெட் காலிங் வசதியும் 100 எஸ்எம்எஸ் வசதியும் மேலே கூறிய ஜியோ-வின் ஓடிடி மற்றும் மற்ற சிறப்பு செயலிகளை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ரூபாய் 2999 பிளான்: ஜியோவின் இந்த திட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜியோவின் புத்தாண்டு சலுகையாக திட்டத்தில் 365 நாட்களோடு வேலிடிட்டியும், கூடுதலாக 23 நாட்கள் நீடித்துக் கொள்ளக்கூடிய வேலிடிட்டியும் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 2.5 என்ற அளவில் ஒட்டுமொத்தமாக 912.5 ஜிபி அளவிலான அளவிலான டேட்டா வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்தத் திட்டத்திலும் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயல்களுக்கான மெம்பர்ஷிப்பும் வழங்கப்படுகிறது.

இத்திட்டம் ஜியோவின் புத்தாண்டு சலுகையாக வருவதால் இதற்காக கூடுதலாக எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்திற்கு தங்கள் எண்ணை ரீசார்ஜ் செய்து கொண்டாலே 23 நாட்கள் கூடுதலான வேலிடியுடன் 75 ஜிபி அளவிலான கூடுதல் அதிவேக இன்டர்நெட் பெற முடியும்

ஏர்டெல் ஆண்டு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்:

ரூபாய் 3359 பிளான்: இந்த கட்டணத்திற்கு 365 நாட்களுக்கான வேலிடியும் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி என்ற அளவில் டேட்டாவையும் வழங்குகிறது. மேலும் இதனுடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. அது தவிர இத்திட்டத்தில் இணையும் வாடிக்கையாளருக்கு ஓராண்டுக்கான அமேசான் ப்ரைம் மொபைல் சப்ஸ்கிரிப்ஷனும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷனும் இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதலாக அப்பல்லோ 24/7 சப்ஸ்கிரிப்ஷனும் வழங்கப்படுகிறது. இதனுடன் ஃபாஸ்ட்டாகின் 100 ரூபாய் காண கேஷ் பேக் வசதியும் அளிக்கப்படுகிறது. வின்க் மியூசிக்கான இலவசம் மெம்பர்ஷிப்பும் அளிக்கப்படுகிறது.

ரூபாய் 2999 பிளான்: திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டா என்ற அளவில் 365 நாட்களுக்கான வேலிடிட்டி அளிக்கப்படுகிறது. ஏற்கனவே மேலே கூறிய சலுகைகளான அப்பல்லோ 24/7 சர்க்கிள் சப்ஸ்கிரிப்ஷன், பாஸ்ட் ட்ராக் 100 ரூபாய்க்காண கேஷ் பேக், வின்க் மியூசிக், இலவச ஹலோ டியூன் ஆகியவையும் அளிக்கப்படுகின்றன.

ரூபாய் 1799 பிளான்: இத்திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 24 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் காலிங் வசதியும் 3600 எஸ்எம்எஸ் இலவசமாகவும், 365 நாட்களுக்கான வேலிட்டியுடன் வழங்கப்படுகிறது. ஏர்டெல் இரண்டாவது சிம் ஆக பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இத்திட்டம் சிறந்ததாக அமையும்.

வோடபோன் ஆண்டு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்:

ரூபாய் 3099 பிளான்: திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு 365 நாட்களுக்கான வேலிடிட்டியும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவும் அன்லிமிடெட் காலிங் வசதியும் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு வோடபோன் சலுகைகளான மிட் நைட் மற்றும் டேட்டா ரோலோவர் ஆகியவையும் அளிக்கப்படுகின்றன. இவற்றைத் தவிர விஐ மூவிஸ் அண்டு டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் காண ஒரு வருடத்திற்கான சப்ஸ்கிரிப்ஷனும் இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதலாக 75 ஜிபி டேட்டாவும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

ரூபாய் 289 9 பிளான்: இத்திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 15ஜிபி அளவிலான டேட்டாவும் அன்லிமிடெட் காலிங் வசதியும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் இலவசமாகவும் 365 நாட்களுக்கான வேலிட்டியுடன் வழங்கப்படுகிறது. இவர் மேலே கூரியுல் வீக் எண்டு டேட்டா ரோலோவர் ஆகிய வசதிகளும் அளிக்கப்படுகின்றன.

First published:

Tags: Airtel, Jio, Vodafone