• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ஸ்ட்ரீமிங் நன்மைகளுடன் ரூ.500 க்கு குறைவான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கும் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள்

ஸ்ட்ரீமிங் நன்மைகளுடன் ரூ.500 க்கு குறைவான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கும் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள்

ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கும் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள்

ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கும் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள்

நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ மற்றும் vi ஆகியவை பல சலுகைகளுடன் கூடிய ப்ரீபெய்ட் ஸ்கீம்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.

  • Share this:
நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ மற்றும் Vi ஆகியவை பல சலுகைகளுடன் கூடிய ப்ரீபெய்ட் ஸ்கீம்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. இந்த ஸ்கீம்களில் சில அமேசான் பிரைம் போன்ற ஸ்ட்ரீமிங் பெனிஃபிட்களையும் வழங்கி வருகின்றன.

அமேசான் பிரைம் சப்ஸ்கிரைபர்களின் மாதாந்திர, காலாண்டு மற்றும் வருடாந்திர பிளான்களின் விலையில் மாற்றம் இருக்கும் என்று அமேசான் தனது வெப்சைட்டில் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிவிப்பு டெலிகாம் நிறுவனங்கள் வழங்கி வரும் பிளான்களையும் பாதிக்கலாம். தினசரி 2GB மற்றும் 3GB டேட்டா வழங்கும் பிளான்கள் மற்றும் டபுள் டேட்டா பெனிஃபிட்ஸ் வழங்கும் பிளான்களை கூட டெலிகாம் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. பெரும்பாலும் அன்லிமிடட் கால்ஸ் கொண்ட 2GB தினசரி டேட்டா பிளான்கள் பெரும்பாலான யூசர்களுக்கு போதுமானது என்றாலும் WFH, ஸ்ட்ரீமிங் அல்லது கேமிங் நோக்கங்களுக்காக தினசரி அதிக டேட்டா தேவைப்படும் யூஸர்களும் இருக்கிறார்கள்.

ரூ.500-க்குள் கிடைக்கும் தினசரி டேட்டா பிளான்கள்

ஏர்டெல்:

*ஏர்டெல்லின் ரூ.298 ப்ரீபெய்ட் பிளான்: 28 நாள் வேலிடிட்டியுடன் நாளொன்றுக்கு 2ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. கூடுதல் நன்மைகளாக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் ஃப்ரீ ஆன்லைன் கோர்ஸ்ளுக்கான அணுகலுடன் கூடிய Wynk மியூசிக் மற்றும் ரூ.150 FASTag கேஷ்பேக், பார்தி ஆக்சா லைஃப் இன்ஷுரன்ஸ் காப்பீட்டிற்கான அணுகல் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. Airtel Thanks app மூலம் இந்த பிளானை ரீசார்ஜ் செய்யும் யூஸர்கள் ரூ.50 தள்ளுபடி மற்றும் 2ஜிபி கூடுதல் டேட்டாவை ரூ.248-க்கு பெறுவார்கள்.

ALSO READ |  ஆண் குழந்தைகளுக்காக எப்படி சேமிக்கலாம்? எங்கு சேமிக்கலாம்? எதில் வட்டி அதிகம்! முழு விபரம்

*ஏர்டெல்லின் ரூ.449 பிளான்: 56 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிட்டட் கால்ஸ், தினசரி 2GB டேட்டா, ஒரு நாளைக்கு 100 SMS, 1 மாதத்திற்கான அமேசான் பிரைம் சப்ஸ்கிரிப்ஷன் உள்ளிட்டவற்றை வழங்குகிறது.

*ஏர்டெல்லின் ரூ.398 திட்டம்: 28 நாட்கள் வேலிடிட்டி, நாளொன்றுக்கு 3GB டேட்டா, அன்லிமிட்டட் கால்ஸ், 100 SMS விங்க் மியூசிக் மற்றும் ஷா அகாடமிக்கான சந்தா, பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியத்திற்கான சந்தா, FASTag பரிவர்த்தனைகளில் ரூ.150 கேஷ்பேக் ஆகிய நன்மைகளை தருகிறது.

*ஏர்டெல்லின் ரூ.499 திட்டம்: 28 நாட்கள் வேலிடிட்டி, நாளொன்றுக்கு 3GB டேட்டா, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான 1 வருட அணுகல், 100 SMS மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தா, விங்க் மியூசிக் மற்றும் ஷா அகாடமியின் சந்தாக்களுடன் கூடுதலாக பிரைம் வீடியோ மொபைல் வெர்ஷனும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ:

*ஜியோவின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்: 28 நாட்கள் வேலிடிட்டி, தினசரி 2GB டேட்டா, அன்லிமிட்டட் கால்ஸ், ஜியோ ஆப்ஸ்களுக்கான காம்ப்ளிமென்டரி சந்தா, 100 SMS உள்ளிட்டவற்றை யூஸர்களுக்கு வழங்குகிறது.

ALSO READ |  அமேசான், ப்ளிப்கார்ட்டின் பண்டிகைக் கால சலுகை: குறைந்த விலை விற்பனை எப்படி சாத்தியமாகிறது

*ஜியோவின் ரூ 349 ப்ரீபெய்ட் திட்டம்: 28 நாட்கள் வேலிடிட்டி, நாளொன்றுக்கு 3GB டேட்டா மற்றும் அன்லிமிட்டட் லோக்கல் கால்ஸ், 100 SMS, ஜியோ ஆப்ஸ்களுக்கான காம்ப்ளிமென்டரி சந்தா உள்ளிட்டவை இதில் அடக்கம்.

*ஜியோ ரூ. 499 ப்ரீபெய்ட் திட்டம்: 28 நாட்கள் வேலிடிட்டி, தினசரி 3GB டேட்டாவுடன் கூடுதலாக 6GB டேட்டா, அன்லிமிட்டட் கால்ஸ், ஜியோ ஆப்ஸ்களுக்கான காம்ப்ளிமென்டரி சந்தா, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான 1 வருட சந்தாவையும் வழங்குகிறது.

VI:

*ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்: டூயல் டேட்டா ப்ரீபெய்ட் ஸ்கீமான இது 28 நாட்கள் வேலிடிட்டி, 2 பிளஸ் 2, 4GB தினசரி டேட்டா Vi Movies மற்றும் டிவிஅணுகலுடன் Zomato உணவு ஆர்டர்களில், தினசரி ரூ.75 தள்ளுபடியுடன் MPL -ல் தங்களுக்குப் பிடித்த கேம்களை விளையாட யூஸர்களுக்கு ரூ.125 உறுதிசெய்யப்பட்ட போனஸ் உள்ளிட்டவற்றை வழங்குகிறது.

ALSO READ |  பணத்தை சேமிக்க கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள்!

*ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம்: இதுவும் டூயல் டேட்டா பிளான் தான். 58 நாட்கள் வேலிடிட்டி, தினசரி 4GB டேட்டா, அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ், நாளொன்றுக்கு 100 SMS, வீக் எண்ட் ரோல்ஓவர் டேட்டா பெனிஃபிட்ஸ், Vi Movies மற்றும் TV-க்கான அணுகல் உள்ளிட்ட பல நன்மைகளை கொண்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: