Home /News /business /

உலகின் சுற்றளவை விட 27 மடங்கு அதிகம்.. ஜியோ ஃபைபர் ஆப்டிக்கின் நீளம் குறித்து கூறிய முகேஷ் அம்பானி

உலகின் சுற்றளவை விட 27 மடங்கு அதிகம்.. ஜியோ ஃபைபர் ஆப்டிக்கின் நீளம் குறித்து கூறிய முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

இரண்டு ஆண்டுகள் கொரோனா லாக்டவுன் இருந்த போதிலும் கூட 70 லட்சம் வாடிக்கையாளர்களை ஜியோ ஃபைபர் பெற்றுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mumbai, India
    ஜியோ நிறுவனம் அமைக்கவுள்ள அகில இந்திய ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் உலகத்தை 27 முறை சுற்றி வரும் அளவிற்கு நீளமானது என ரிலையனஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45வது ஆண்டு பொதுக்கூட்ட மாநாட்டில் அதன் தலைவர் முகேஷ் அம்பானி உரையாற்றினார். அதில் பேசிய அவர், ஜியோ ஃபிக்ஸட் லைன் நெட்வொர்க் மூலம் இந்தியா முழுவதும் 5ஜி இணைய சேவை வழங்கப்படவுள்ளது என கூறினார். மேலும், அதிக தரம் வாய்ந்த, தேவைக்கு அதிகமான, எல்லா நேரங்களிலும் பயன்படுத்தக்கூடிய ஃபைபர் ஆப்டிக் சேவையை வழங்குவதே ஜியோ நிறுவனத்தின் குறிக்கோள் என தெரிவித்தார்.

    இந்தியாவின் எல்லா மூலைகளில் இருந்தும் டேட்டாவை கடத்தி செல்வதும் அதை மற்ற நாடுகளுடன் இணைப்பதும் தான் இது செய்யக்கூடிய வேலை என கூறினார். அதிலும் ஜியோவின் இந்த அகில இந்திய ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க்கின் நீளம் 11 லட்சம் கிலோ மீட்டர் எனவும் இது உலகத்தின் சுற்றளவை விட 27 மடங்கு அதிகம் என அதன் பிரம்மாண்டம் குறித்து பெருமிதம் தெரிவித்தார்.

    இதையும் படிக்க:  தீபாவளி முதல் ஜியோ 5G சேவை.. ரிலையன்ஸ் ஆண்டுக் கூட்டத்தில் முகேஷ் அம்பானி அறிவிப்பு

    ஜியோ ஃபைபர் தான் இந்தியாவின் முதன்மையான எஃப்.டி.டி.எக்ஸ் சேவையை வழங்கி வருகிறது என கூறினார். மேலும் இரண்டு ஆண்டுகள் கொரோனா லாக்டவுன் இருந்த போதிலும் கூட 70 லட்சம் வாடிக்கையாளர்களை ஜியோ ஃபைபர் பெற்றுள்ளது என கூறினார். கடந்த ஆண்டில் மூன்றில் இரண்டு வாடிக்கையாளர்கள் ஜியோவை தேர்வு செய்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Jio Fiber, Mukesh ambani, Reliance AGM 2022

    அடுத்த செய்தி