முகப்பு /செய்தி /வணிகம் / கடனில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ்-ஐ மீட்க கை கொடுக்கும் ஊழியர்கள்!

கடனில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ்-ஐ மீட்க கை கொடுக்கும் ஊழியர்கள்!

ஜெட் ஏர்வேஸ்.

ஜெட் ஏர்வேஸ்.

கடந்த 4 மாதமாக ஊதியம் வழங்கப்படாததால் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

கடனில் மூழ்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்டெடுப்பதற்காக அதன் ஊழியர்களும், ஆடி பார்ட்னர்ஸ் நிறுவனமும் முதலீடு செய்ய முன்வந்துள்ளன.

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் பெறப்பட்ட 25 ஆயிரம் கோடியை திருப்பிச் செலுத்த முடியாததால் கடனில் சிக்கித் தவித்து வருகிறது.

கடந்த 4 மாதமாக ஊதியம் வழங்கப்படாததால் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஜெட் ஏர்வேஸ் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கடன் சுமையை சமாளிக்க அதன் ஊழியர்கள் மற்றும் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆடி பார்ட்னர்ஸ் நிறுவனமும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.

ஆடி பார்ட்னர்ஸ் நிறுவனம் 49 சதவீதமும், ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் 26 சதவீதமும் என 75 சதவீதம் வரை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளன.

மேலும் பார்க்க:

First published:

Tags: Jet Airways