முகப்பு /செய்தி /வணிகம் / 20,000 பேரின் வேலையை காப்பாற்றுங்கள்; மோடியிடம் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் கோரிக்கை!

20,000 பேரின் வேலையை காப்பாற்றுங்கள்; மோடியிடம் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் கோரிக்கை!

மாதிரி படம்

மாதிரி படம்

ஜெட் ஏர்வேஸ் ஒரு ஆண்டுக்கு செலுத்த வேண்டிய விமான எரிபொருள் கட்டணம் மட்டும் 7,000 கோடி ரூபாயாக உள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிதி பற்றாக்குறை காரணமாக முடங்கி வருகிறது. இந்நிலையில் அதன் 1,100-க்கும் மேற்பட்ட விமான ஓட்டுநர்கள் திங்கட்கிழமை முதல் சம்பள நிலுவைத் தொகையை கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெட் ஏர்வேஸ் விமான ஓட்டுநர்கள் சங்கத்தில் 1,100-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கமானது ஜெட் ஏர்வேஸில் வேலை செய்யும் 20,000 ஊழியர்களின் வேலையை காப்பாற்றுங்கள் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

எஸ்பிஐ தலைமையிலான குழு சென்ற மாதம் முதல் ஜெட் ஏர்வேஸின் நிர்வாக பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், அவர்கள் உடனடியாக 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இந்த சிக்கலுக்கு தீர்வு காண ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஜெட் ஏர்வேஸை யாருக்கு விற்று கடனை மீட்கலாம் என்று கண்ணோட்டத்தில் எஸ்பிஐ தீவிரமாக உள்ளது. அண்மையில் ஜெட் ஏர்வேஸ் வெளிநாட்டு விமான பயணங்களை முழுமையாக நிறுத்தியது.

தொடர்ந்து இப்படியே சென்றால் எங்கு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் போன்று ஜெட் ஏர்வேஸூம் திவாலாகிவிடுமோ? என்று, அரசும் தலையிட்டு சுமூக முடிவு காண முயற்சி செய்துள்ளது.

சென்ற மாதம் வரை 50-க்கும் மேற்பட்ட விமானங்களுடன் இயங்கி வந்த ஜெட் ஏர்வேஸ் தற்போது வெறும் 7 விமானங்களுடன் உள்நாட்டு விமான சேவையை மட்டும் வழங்கி வருகிறது.

இடைக்கால நிதியாக 1,500 கோடி ரூபாயை உடனடியாக ஜெட் ஏர்வேஸ் அளிக்க முடிவு செய்துள்ளதால் இன்று பங்குகள் லாபத்துடன் ஃபிளாட்டாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், ஜெட் ஏர்வேஸ் ஒரு ஆண்டுக்கு செலுத்த வேண்டிய விமான எரிபொருள் கட்டணம் மட்டும் 7,000 கோடி ரூபாயாக உள்ளது.

எஸ்பிஐ ஒதுக்கும் நிதியை வைத்து தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவை வழங்கப்படுமா அல்லது கடன்கள் குறைக்கப்படுமா அல்லது ஊழியர்களின் சம்பளை நிலுவைத்தொகையை வழங்குவது போன்றவற்றை செய்ய முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் பார்க்க:

First published:

Tags: Jet Airways