முகப்பு /செய்தி /வணிகம் / 60 சதவீத ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாத விடுப்பு வழங்க ஜெட் ஏர்வேஸ் முடிவு? அதிர்ச்சியில் ஊழியர்கள்!

60 சதவீத ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாத விடுப்பு வழங்க ஜெட் ஏர்வேஸ் முடிவு? அதிர்ச்சியில் ஊழியர்கள்!

ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது 60 சதவீத ஊழியர்களுக்கு சம்பளம் இல்லா விடுப்பு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ள விமானப் போக்குவரத்து சேவை நிறுவனம் தான் ஜெட் ஏர்வேஸ். 1992ஆம் ஆண்டில் தொழிலதிபர் நரேஷ் கோயல் இந்த நிறுவனத்தை தொடங்கினார். 1993ஆம் ஆண்டில் இருந்து இந்த நிறுவனம், சுமார் 27 ஆண்டுகள் விமானச் சேவைகளை வெற்றிகரமாக வழங்கி வந்தது. இந்நிலையில், பல கோடி ரூபாய் கடன் பிரச்சனையின் காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டில் விமானங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வெளிநாட்டு வாழ் இந்தியர்களான ஜலான் மற்றும் லண்டனைச் சேர்ந்த கல்ராக் கேபிடல் ஆகிய நிறுவனங்களிடம் என்.சி.எல்.டி. ஒப்படைத்தது.

இதையடுத்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஓடாமல் இருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீண்டும் இயக்க ஜாலான்-கால்ராக் கூட்டமைப்பு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஜெட் ஏர்வேஸ் இயக்கத்திற்காக ரூ.900 கோடி முதலீடு செய்வதாக கூட்டமைப்பு உறுதி அளித்திருந்த நிலையில், இதுவரை ரூ.150 கோடி மட்டுமே முதலீடாக வழங்கியுள்ளது.

இந்நிலையில்,ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது மூத்த ஊழியர்கள் உட்பட 60 சதவீதம் பேரை டிசம்பர் 1ஆம் தேதி முதல் மூன்று மாதத்திற்கு சம்பளம் இல்லா விடுமுறை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், பல ஊழியர்களுக்கு சுமார் 50 சதவீதம் சம்பளக் குறைப்பை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அரசு வாகனத்துடன் இன்ஸ்டாகிராமில் கெத்து போஸ்ட்... ஐஏஎஸ் அதிகாரி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை

top videos

    அதேவேளை, ஜெட் ஏர்வேஸ் சிஇஓ சஞ்சீவ் கபூர் இந்த தகவலை மறுத்துள்ளார். எனவே, இன்னும் சில நாள்களுக்குப் பின்னர் தான் இந்த விவகாரம் குறித்து உறுதியான தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    First published:

    Tags: Jet Airways, Salary