Home /News /business /

ஜெட் ஏர்வேஸ் இல்லாத இடத்தை நிரப்ப போட்டி; தள்ளுபடி விலையில் டிக்கெட்டுகள் அறிவிப்பு!

ஜெட் ஏர்வேஸ் இல்லாத இடத்தை நிரப்ப போட்டி; தள்ளுபடி விலையில் டிக்கெட்டுகள் அறிவிப்பு!

ஜெட் ஏர்வேஸ்.

ஜெட் ஏர்வேஸ்.

நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

  • News18
  • Last Updated :
முன் பதிவு செய்த டிக்கெட்டுகளுக்கான தொகையை இன்னும் 45 நாட்களுக்குள் கொடுத்து விடுவதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதை ஸ்பைஸ் ஜெட், கோ ஏர் போன்ற நிறுவனங்கள் சரியாக பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றன.

ஜெட் ஏர்வேஸ் சேவை வழங்கி வந்த விமான பாதையை பெறுவதில் விமான நிறுவனங்களிடையே போட்டா போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இண்டிகோ நிறுவனத்திடம் தற்போது 200 விமானங்கள் உள்ளன, இதோடு சேர்த்து மேலும் 6 விமானங்களை இந்நிறுவனம் களமிறக்க உள்ளது.

மற்றொரு புறம் கோ ஏர் நிறுவனமும், ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் தலா 28 விமானங்களை புதிதாக தனது சேவையில் இணைக்க உள்ளன. மேலும், தள்ளுபடி விலையில் விமான டிக்கெட்டுகளை அறிவித்துள்ளன.

கோ ஏர் நிறுவனம் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு ஆயிரத்து 368 ரூபாய்க்கு விமான சேவையை அறிவித்துள்ளது. இண்டிகோ நிறுவனம் 2 ஆயிரத்து 499 ரூபாய் முதல் விமான சேவையை அறிவித்துள்ளது.

மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:

Tags: Jet Airways

அடுத்த செய்தி