முகப்பு /செய்தி /வணிகம் / வேலை நிறுத்தத்தை தள்ளி வைத்த ஜெட் ஏர்வேஸ் விமானிகள்!

வேலை நிறுத்தத்தை தள்ளி வைத்த ஜெட் ஏர்வேஸ் விமானிகள்!

ஜெட் ஏர்வேஸ்.

ஜெட் ஏர்வேஸ்.

தொடர் நட்டம், கடன் அதிகரிப்பு போன்ற காரணங்களால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த 1 வருடமாகவே ஊழியர்களுக்குச் சரியான நேரத்தில் சம்பளத்தை அளிக்க முடியாமல் திணறி வந்தது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

சம்பளம் நிலுவைத் தொகை வழங்குவதில் ஏற்பட்டு வந்த பேச்சுவார்த்தை தோல்வியால் நாளை முதல் ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர்.

தொடர் நட்டம், கடன் அதிகரிப்பு போன்ற காரணங்களால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த 1 வருடமாகவே ஊழியர்களுக்குச் சரியான நேரத்தில் சம்பளத்தை அளிக்க முடியாமல் திணறி வந்தது.

சென்ற வாரம் திங்கட்கிழமை கடனுக்கான பொறுப்பைப் பங்குகளாக மாற்றிக்கொள்ள எஸ்.பி.ஐ முன்வந்தது. உடனே ஊழியர்கள் சம்பளம் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று கோரிக்கையும் ஒரு பக்கம் எழுந்தது.

விமானிகள் ஊழியர்கள் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விமானிகளுக்கு டிசம்பர் மாத சம்பளம் மட்டும் தற்போது பட்டுவாடா செய்யப்படும் என ஜெட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அந்நிறுவனத்தின் 200 விமானிகள் உள்பட அனைத்து ஊழியர்களும் நாளை முதல் வேலைநிறுத்தத்தைத் தொடங்கப் போவதாக அறிவித்திருந்ததை ஏப்ரல் 15-ம் தேதி வரை தள்ளி வைத்துள்ளனர்.

இதனால் ஜெட் ஏர்வேஸ் விமானச் சேவை நாளை முதல் முற்றிலும் முடங்கும் என்றிருந்த அபாயம் சற்று குறைந்துள்ளது.

மேலும் பார்க்க:

First published:

Tags: Jet Airways