Home /News /business /

விமான சேவை நிறுத்தத்தால் வேலை இழப்பு; ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

விமான சேவை நிறுத்தத்தால் வேலை இழப்பு; ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

ஜெட் ஏர்வேஸ் இயக்குநர் நரேஷ் கோயல் மும்பையில் நடந்த   கூட்டத்தில் பேசியபோது

ஜெட் ஏர்வேஸ் இயக்குநர் நரேஷ் கோயல் மும்பையில் நடந்த கூட்டத்தில் பேசியபோது

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்ததால் விமான சேவையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

  • Last Updated :
ஜெட் ஏர்வேஸ் நிறுவன பிரச்னையில் அரசு தலையிடக்கோரி, அந்த நிறுவன ஊழியர்கள் மகராஷ்டிராவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பை சத்திரபதி விமானநிலையம் முன் நடைபெற்ற அமைதி வழி ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்ததால், ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்க முடியவில்லை என்று கூறி, விமான சேவையை நிறுத்தியது.

இதனால் அதில் பணிபுரிந்து வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, பிரச்னைகள் தீர்க்க வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியிறுத்தியுள்ளனர்.

மறுபக்கம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவருமான நரேஷ் கோயல், “தனது பங்காக ஜெட் ஏர்வேஸில் 250 கோடி ரூபாயை வங்கிகளுக்கு அளித்துவிட்டு தான் தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன்.

இருந்தாலும் நீங்கள் சம்பளம் பெறாமல் இத்தனை நாட்கள் வேலை செய்தது அதைவிடப் பெரியது” என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:

Tags: Jet Airways

அடுத்த செய்தி