ஹோம் /நியூஸ் /வணிகம் /

வேலையிழந்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்!

வேலையிழந்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்!

ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் முடங்கியதால், வேலையிழந்த பணியாளர்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடன் சுமை காரணமாக ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் முடங்கியது. இதனால், அங்கு பணிபுரிந்த சுமார் 500 பேருக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வேலை வழங்கியுள்ள நிலையில், மேலும் சிலருக்கு தாஜ் ஹோட்டல் நிறுவனம் பணி வழங்க முன் வந்துள்ளது.

இதனிடையே வேலையிழந்து தவிக்கும் ஏராளமான பணியாளர்கள், டெல்லி சஃப்தார்ஜங் விமான நிலையத்திலும், விமான போக்குவரத்துத் துறை அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களுக்கு சேர வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை பெற்றுத்தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்த அவர்கள், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் பார்க்க:

First published:

Tags: Jet Airways