முகப்பு /செய்தி /வணிகம் / ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு அடி மேல் அடி...! ஃபோரக்ஸ் கார்டில் இருந்து பணம் பிடிப்பு

ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு அடி மேல் அடி...! ஃபோரக்ஸ் கார்டில் இருந்து பணம் பிடிப்பு

ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ்

நிதி சிக்கலில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஏப்ரல் 17-ம் தேதி முதல் முழுவதுமாக முடங்கியுள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவன உழியர்களின் ஃபோரக்ஸ் கார்டிலிருந்து திடீரெனப் பணம் பிடிக்கப்பட்டதால் வேலை இல்லாமல் தவித்து வரும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விமானத்தில் பயணம் செய்யும் ஊழியர்களுக்கு அவரகளுக்கு ஏற்படும் பயண செலவுகளுக்காக ஃபோரக்ஸ் எனப்படும் வெளிநாட்டு கரன்சி கார்டு வழங்கப்படும்.

அப்படி ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 1,000 கேபின் பராமரிப்பு ஊழியர்கள் மற்றும் 300 விமான ஓட்டுநர்களுக்கு ஃபோரக்ஸ் கார்டை வழங்கியிருந்தது.

அதில் பல ஊழியர்கள் தங்களது சேமிப்பாக 1.4 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை வைத்திருந்துருக்கிறார்கள். இந்நிலையில், திடீரென ஜெட் ஏர்வேஸின் ஃபோரக்ஸ் கார்டு சேவை வழங்குநரான Weizmann Forex அந்தக் கார்டுகளிலிருந்த பணத்தை பிடித்துள்ளது.

இதனால், பதறி ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் சேவை மையத்தை தொடர்பு கொண்டபோது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தங்களுக்கு 1.62 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை அளிக்க வேண்டி உள்ளது. அதற்காக இந்த ஃபோரக்ஸ் கார்டுகளிருந்த பணத்தை பிடித்ததாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைத் தொடர்புகொண்டபோது பதில் ஏதும் அளிக்கவில்லை என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நிதி சிக்கலில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஏப்ரல் 17-ம் தேதி முதல் முழுவதுமாக முடங்கியுள்ளது. நிறுவனத்தில் உள்ள சிக்கலை மீட்டு அதை விற்பதற்கான பொறுப்பை எஸ்.பி.ஐ ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க:

First published:

Tags: Jet Airways