Home /News /business /

ஜெட் ஏர்வேஸ்க்கு எஸ்பிஐ வங்கி நிதி அளிக்கக் கோரி வழக்கு தொடர்ந்த விமானிகள்!

ஜெட் ஏர்வேஸ்க்கு எஸ்பிஐ வங்கி நிதி அளிக்கக் கோரி வழக்கு தொடர்ந்த விமானிகள்!

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதியுடன் விமான சேவையை நிறுத்திக் கொண்டது.

  • News18
  • Last Updated :
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு இடைக்கால நிதியை வழங்க எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிடக் கோரி விமானிகள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதியுடன் விமான சேவையை நிறுத்திக் கொண்டது.

இடைக்கால நிதியாக ஆயிரத்து 500 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று எஸ்.பி.ஐ வங்கி தரப்பில் உறுதி அளிக்கப்பட்ட போதும், அதனால் பயனில்லை என்று கருதி எஸ்.பி.ஐ வங்கி நிதியை வழங்கவில்லை.

அந்த நிதியை வழங்க எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானிகள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேலும், ஜெட் ஏர்வேஸ் விமானங்களின் பதிவை ரத்து செய்யக் கூடாது என்றும், ஜெட் ஏர்வேஸ் விமானங்களுக்கு இருந்த பயண நேரத்தை வேறு விமான நிறுவனத்திற்கு ஒதுக்க கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:

Tags: Jet Airways

அடுத்த செய்தி