ஹோம் /நியூஸ் /வணிகம் /

3 ஆண்டுகளுக்கு பின் 2வது இன்னிங்க்ஸை தொடங்கும் ஜெட் ஏர்வேஸ்... இம்மாத இறுதிக்குள் 5 விமானங்களுடன் செயல்படும் என தகவல்

3 ஆண்டுகளுக்கு பின் 2வது இன்னிங்க்ஸை தொடங்கும் ஜெட் ஏர்வேஸ்... இம்மாத இறுதிக்குள் 5 விமானங்களுடன் செயல்படும் என தகவல்

ஜெட் ஏர்வேர்ஸ்

ஜெட் ஏர்வேர்ஸ்

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஜெட் ஏர்வேஸ் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க தயாராக உள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Mumbai, India

  பல கோடி ரூபாய் கடன் பிரச்சனையின் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமான சேவை இந்த மாத இறுதிக்குள் (அக்டோபர் இறுதிக்குள்) மீண்டும் செயல்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

  இந்தியாவில் மும்பை நகரைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள விமானப் போக்குவரத்து நிறுவனம் தான் ஜெட் ஏர்வேஸ். இந்தியாவிலேயே ஏர் இந்தியாவிற்கு அடுத்தப்படியாக பெரிய விமான நிறுவனம் மற்றும் உள்ளூர் விமானப் போக்குவரத்துச் சந்தையில் முன்னணி வகித்து வந்தது.

  இந்த சூழலில்  கடன் பிரச்சனைக் காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து என்.சி.எல்.டி வெளிநாட்டு வாழ் இந்தியர்களான ஜலான் மற்றும் லண்டனைச்சேர்ந்த கல்ராக் கேபிடல் ஆகிய நிறுவனங்களிடம் ஒப்படைத்தது.

  ஒப்பந்தத்தின் படி 1350 கோடி ரூபாயை முதலீடு செய்ய ஒப்புக்கொண்டிருந்த நிலையில், சுமார் 450 கோடி வரை பழைய கடன்களுக்குக் கொடுக்கப்படும் எனவும் மீதமுள்ள தொகையை வைத்து புதிதாக ஜெட் ஏர்வேர்ஸ் நடத்துவதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

  இதற்கான பணிகள் மிகவும் துரிதமாக நடைப்பெற்று வந்தது. ஆனால் கொரோனா தொற்று காலம் என்பதால் மந்த நிலையில் செயல்பட்டாலும் இந்த மாத இறுதிக்குள் 5 விமானங்கள் விண்ணில் பறக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஜெட் ஏர்வேஸ் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க தயாராக உள்ளது. மேலும் சமீபத்திய வளர்ச்சியின் படி, இந்தியாவில் செயல்பாடுகளைத் தொடங்க ஐந்து விமானங்களை அடையாளம் கண்டுள்ளது.

  மூன்று A320 Neo மற்றும் இரண்டு B737-8 MAX விமானங்கள் ஜெட் ஏர்வேஸில் சேரும் என்று கூறப்படுகிறது. மேலும் விமான நிறுவனம் தற்போது குத்தகைதாரர்களுடன் குத்தகை ஒப்பந்தங்களில் கையெழுத்திடவில்லை என்றாலும் அது செயல்பாட்டில் உள்ளது.

  இந்நிலையில் தான் கடந்த செப்டம்பரில் விமான சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அக்டோபரில் கூட இதுக்கூட சாத்தியமில்லாத சூழல் நிலவியுள்ளது. மேலும் ஜெட் ஏர்வேர்ஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஏர்பஸ் மற்றும் போயிங் விமானங்களுக்கு விமானிகள் மற்றும் கேபின் ஊழியர்களை பணியமர்த்தும் பணியில் விமான நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

  விரைவில் வரும் வாரங்களில் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கும் எங்கள் ஆரம்ப திட்டத்தை இறுதி செய்வதற்கு நாங்கள் மிக நெருக்கமாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளது. எனவே அக்டோபர் 2022க்குள் தொடங்க இலக்கு வைத்திருப்பதாகவும், அதற்கானப் பணிகளைத் துரிதப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Read More : ஹிஜாப் தடை வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு- பெரிய அமர்வுக்கு மாறும் விசாரணை

  ஆனால் நிச்சயம் அனைத்துப் பணிகளும் முடிய காலதாமதம் எடுப்பதால் அக்டோபர் இறுதிக்குள் ஜெட் ஏர்வேஸ் விண்ணில் பறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் கூறப்படுகிறது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Jet Airways