Home /News /business /

இன்று இரவு முதல் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம் !

இன்று இரவு முதல் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம் !

கோப்புப் படம்

கோப்புப் படம்

ஜெட் ஏர்வேஸிடம் 44 விமானங்கள் உள்ள நிலையில் நிதி நெருக்கடி காரணமாக கடந்த சில நாட்களாக 7 விமானங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தன.

  • News18
  • Last Updated :
சர்வதேச விமான போக்குவரத்து சேவையை முழுமையாக நிறுத்திய ஜெட் ஏர்வேஸ், இன்று இரவு முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையையும் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

நட்டம் மற்றும் கடனில் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் பங்குகளை வாங்க டாடா குழுமம் முதலில் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. பின்னர் ஏற்கனவே ஜெட் ஏர்வேஸில் பங்குதாரராக உள்ள எத்தியாட் ஏர்வேஸூம் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அதுவும் தோல்வியில் முடிந்தது.

வங்கியில் கடன் வாங்கலாம் என்று முயலும் போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்க எஸ்பிஐ தவிர எந்த ஒரு வங்கி நிறுவனங்களும் முன்வரவில்லை. அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே எஸ்பிஐ இந்த விவாகரத்தில் தலையிட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

ஜெட் ஏர்வேஸிடம் 44 விமானங்கள் உள்ள நிலையில் நிதி நெருக்கடி காரணமாக கடந்த சில நாட்களாக 7 விமானங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தன. அப்படி இருந்தும் ஜெட் ஏர்வேஸால் விமான சேவையைத் தொடர்ந்து வழங்க முடியவில்லை.

எனவே விமான சேவையைத் தற்காலிகமாக நிறுத்தலாமா என்றும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் மீட்புக்குழு செவ்வாய்க்கிழமை முதல் விவாதித்து வந்தது.

இந்நிலையில் இன்று இரவு 10:30 மணியோடு ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை முழுமையாக நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:

Tags: Jet Airways

அடுத்த செய்தி