Home /News /business /

அமேசான் சி.இ.ஓ. பொறுப்பிலிருந்து ஜெஃப் பெசாஸ் விலகுகிறார்- புதிய பொறுப்புக்கு சுந்தர்பிச்சை வாழ்த்து

அமேசான் சி.இ.ஓ. பொறுப்பிலிருந்து ஜெஃப் பெசாஸ் விலகுகிறார்- புதிய பொறுப்புக்கு சுந்தர்பிச்சை வாழ்த்து

ஜெஃப் பெசாஸ்.

ஜெஃப் பெசாஸ்.

எனக்கு இப்போது நிறைய ஆற்றல் உள்ளது, இது ஓய்வு பெறுவதற்கான அறிவிப்பு அல்ல என்று ஜெஃப் பெசாஸ் கூறியுள்ளார்.

    அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனமான அமேசான் தலைமைச் செயல் அதிகாரியான ஜெஃப் பெசாஸ் பொறுப்பிலிருந்து விலகவிருக்கிறார்.

    பெசாஸ் இடத்துக்கு அமேசான் வெப் சர்வீசஸ் சி.இ.ஓ. ஆன்டி ஜெஸி வருகிறார். ஜெஃப் பெசாஸ் எக்சிகியூட்டிவ் சேர்மேன் பதவியை ஏற்கவிருக்கிறார்.

    இந்த மாற்றங்கள் 3ம் காலாண்டில் நடைபெறும்.

    1994ம் ஆண்டு தொடங்கப்பட்ட அமேசான் இன்று உலகின் மிகப்பெரிய பன்னாட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனமாகும். மெகா கார்ப்பரேட் என்று அமேசான் அழைக்கப்படுகிறது.

    அமேசான் நிகர விற்பனை 125.56 பில்லியன் டாலர்களாகும். ஆய்வாளர்களின் கணிப்பையும் தாண்டி விற்பனை எகிறியுள்ளது.

    பெசாஸ் இந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை புத்தக விற்பனை மையமாகவே 1994-ல் தொடங்கினார். இந்நிலையில் தான் வேறு பொறுப்பு ஏற்பது பற்றி தன் ஊழியர்களுக்கான குறிப்பில் அவர், “எக்சிகியூட்டிவ் சேர்மேனாக நான் அமேசானின் முக்கிய நடவடிக்கைகளில் அங்கம் வகிப்பேன். இது தவிர டே ஒன் ஃபண்ட், தி பெசாஸ் எர்த் ஃபண்ட், ப்ளூ ஆரிஜின், வாஷிங்டன் போஸ்ட் என்று எனக்குப் பிடித்த சில விஷயங்களிலும் ஈடுபட வேண்டியுள்ளது.

    எனக்கு இப்போது நிறைய ஆற்றல் உள்ளது, இது ஓய்வு பெறுவதற்கான அறிவிப்பு அல்ல” என்று கூறியுள்ளார்.

    இந்நிலையில் அமேசானின் புதிய சி.இ.ஓ. பொறுப்பெறுகும் ஆன்டி ஜெஸி அமேசானி 1997-ல் சேர்ந்தார். இவர் ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ படித்தவர். இவர்தான் அமெசான் வெப் சர்வீசசைத் தொடங்கி அதை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் கிளவுட் பிளாட்பார்மாக உருவாக்கியவர்.

    கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகின் சாமானிய மக்கள் அல்லல்பட பெரிய பெரிய கார்ப்பரேட்களின் லாபம் பெரிய அளவில் குவிந்தது, அந்த வகையில் அமேசான் ஆன்லைன் வர்த்தகமும் பெருகியது. பல நிறுவனங்கள் மூடப்பட அமேசான் மாறாக 4 லட்சம் பேரை வேலைக்கு எடுத்தது குறிப்பிடத்தக்கது.

    ஜெஃப் பெசாஸின் இந்த முடிவை வரவேற்று கூகுள் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை தன் ட்விட்டர் பக்கத்தில், “கங்க்ராட்ஸ் ஜெஃப் பெசாஸ், டே ஒன் மற்றும் எர்த் ஃபண்ட் ஆகியவற்றுக்கு வாழ்த்துக்கள். புதிய பொறுப்பேற்கும் ஜேஸிக்கும் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Amazon, Jeff Bezos, Sundar pichai

    அடுத்த செய்தி