உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான, அமெசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெஃப் பிசோஸ் தனது மனைவி மெக்கின்ஸியை விவாகரத்து செய்ய 35 பில்லியன் டாலர் ஜீவனாம்சம் அளிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதன் இந்திய மதிப்பு 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்.
ஜெஃப் பிசொஸ் (55), மெக்கின்ஸி (48) இருவரும் 1993-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு தான் ஜெஃப் பிசோஸ் அமேசான் நிறுவனத்தைத் தொடங்கியிருந்தார்.
இருவருக்கும் திருமணமாகி 25 வருடங்கள் ஆன நிலையில் கடந்த சில வருடங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். மெக்கின்ஸி தான் ஜெஃப் பிசோஸை விவாகரத்து செய்யத் தயார். ஆனால் தனக்கு ஜீவனாம்சம் அளிக்க வேண்டும் என்று கூறிவந்தார்.
இதற்கு ஒப்புக்கொண்ட ஜெஃப் பிசோஸ் 35 பில்லியன் டாலர் அளிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இருவருக்கும் இடையில் விவாகரத்து பேச்சுவார்த்தைகள் நடைபெற மறுபுறம் ஜெஃப் பிசோஸ் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி லாரன் சான்சஸ் உடன் காதல் வயப்பட்டுள்ளார்.
ஜெஃப் பிசோஸ் ஜீவனாம்சம் வழங்க ஒப்புக்கொண்டதை அடுத்து மெக்கின்ஸியுடன் விவகாரத்து கிடைத்தது. இவருக்கு விவாகரத்து கிடைத்த அடுத்த நாளே தற்போதைய காதலி லாரன் சான்சஸ் அவரது கணவன் பாட்ரிக் விட்செல்லிடம் விவகாரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
இவ்வளவு பெரிய தொகையை ஜீவனாம்சமாக ஜெஃப் பிசோஸ் வழங்கிய பிறகும் உலகின் நம்பர் 1 கோடீசுவரராகவே தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பார்க்க:
மேலும் வணிக செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. வணிக செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
ஐ.பி.எல் தகவல்கள்
POINTS TABLE:
ORANGE CAP:
PURPLE CAP:
RESULTS TABLE:
SCHEDULE TIME TABLE:
Published by:Tamilarasu J
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.