191.2 பில்லியன் டாலர்கள் சொத்துடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் மீண்டும் உலகின் நம்பர் பணக்காரர் என்ற இடத்துக்குச் சென்றார்.
டெஸ்லா நிறுவனத் தலைவர் எலோன் மஸ்க் 2ம் இடத்துக்குப் பின்னடைவு கண்டதாக புளூம்பர்க் பில்லியனர் இண்டெக்ஸ் கூறுகிறது. 3 ஆண்டுகளாக பெசாஸ் இருந்த இடத்திலிருந்து அவரை எலோன் மஸ்க் கடந்த மாதம் அகற்றினார்.
டெஸ்லா பங்குகள் பங்குச்சந்தையில் செவ்வாயன்று 2.4% குறைந்ததையடுத்து எலோன் மஸ்க்கின் சொத்து 4.6 பில்லியன் டாலர்கள் குறைந்தது. இதனையடுத்து 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
முன்னதாக டெல்ஸா நிறுவனப் பங்குகள் உயர்ந்து கொண்டே வந்ததால் எலோன் மஸ்க் முதலிடம் பிடித்திருந்தார். ஆனால் தற்போது அமேசான் நிறுவனர் முதலிடத்திற்கு மீண்டும் வந்தார்.
இப்போது டெல்சாவைக் காட்டிலும் பெசாஸ் 995 மில்லியன் டாலர்கள் கூடுதலாக சொத்துடையவராகி டெல்சா நிறுவனர் மஸ்க்கைப் பின்னுக்குத் தள்ளினார்.
எலெக்ட்ரிக் கார் நிறுவனமான டெல்சா 2020- தன் டெலிவரி இலக்குகளை சரியாக எட்டியதால் டெல்சாவின் சந்தை மூலதனம் 2020-ல் கடுமையாக அதிகரித்தது.
டெல்ஸா நிறுவனர் எலோன் மஸ்க்கின் ட்வீட்கள் அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தக உலகத்தையே ஆட்டம் காணச்செய்தது, இவரது ட்வீட்களால் கேம்ஸ்டாப் கார்ப்பரேஷன், எட்சி ஷாப்பிஃபை, சிடி புரோஜெக்ட் எஸ்.ஏ. மற்றும் சிக்னல் நிறுவனப்பங்குகளின் விலை எகிறின.
2021ம் ஆண்டு அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸுக்கு சம்பவங்கள் நிறைந்த ஆண்டாக இருந்து வருகிறது. சி.இ.ஓ நிலையிலிருந்து விலகவுள்ளதாக அறிவித்தார். ஆண்டி ஜஸி என்பவரிடம் பொறுப்பை ஒப்படைக்கப் போவதாக தெரிவித்தார்.
ஆன்லைன் புக் ஸ்டோராக 1995ல் அமேசானைத் தொடங்கினார் பெசாஸ். இப்போது 1.7 ட்ரில்லியன் டாலர்கள் பெறுமான இ-காமர்ஸ் ஜெயண்ட்டாக உருவெடுத்துள்ளது அமேசான்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.