2025-க்குள் இந்தியாவில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் - அமேசான் நிறுவனர்

2025-க்குள் இந்தியாவில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் - அமேசான் நிறுவனர்
ஜெஃப் பெசோஸ்
  • Share this:
2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 10 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகப்படும் என்று அமேசான் நிறுவனர் ஜெஃப் பீசோஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் அமேசான் நிறுவனத்தின் சி.இ.ஓ ஜெஃப் பீசோஸ், இரண்டுநாள் பயணமாக இந்தியா வந்திருந்தார்.
டெல்லியில் கடந்த 15 மற்றும் 16-ம் தேதியில் சம்பவ் (SMBhav) என்கிற பெயரில் சிறு குறு தொழில்முனைவோர்களுக்கான கூட்டத்தை அமேசான் நடத்திய நிலையில், இதில் ஜெஃப் கலந்து கொண்டிருந்தார்.


இந்தியாவில் சிறு குறு தொழில்களை டிஜிட்டைஸ் செய்ய 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யப் போவதாக ஜெஃப் இந்த கூட்டத்தில் பேசியிருந்தார். இந்த முதலீட்டைக் குறித்துப் பேசிய வர்த்தகம் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் "அமேசான் நிறுவனம் இந்தியாவில் 1 பில்லியன் டாலரை முதலீடு செய்வதால், இந்தியாவுக்கு எந்த ஒரு பெரிய உதவியையும் செய்யவில்லை.

இந்தியாவில் முதலீடு செய்வதால் மின்னணு வர்த்தகத்துக்கு ஆதரவான செயல்பாடுகளை எடுக்க முடியாது. மல்டி பிராண்ட் சில்லரை விற்பனையில் 49 சதவீதத்துக்கு மேல் நேரடி அந்நிய முதலீட்டை உயர்த்தும் திட்டம் இல்லை. எந்த நிறுவனமாக இருந்தாலும் அது இந்தியாவின் சட்டவிதிகளுக்கு உட்பட்டே நடத்தப்பட வேண்டும்" எனச் சொன்னார்.

இந்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ஜெஃப் பீசோஸை பிரதமர் மோடி சந்திக்காதது, பியூஷ் கோயலின் கருத்து ஆகியவை பல கேள்விகளை எழுப்பியிருந்தன. எனினும், ஜெஃப் பீசோஸ் தனது பயணத்தை அமைதியாக முடித்துக்கொண்டு கிளம்பினார். இதனை அடுத்து, தனது இந்தியப் பயணம் குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், நான் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போது புத்துணர்ச்சியையும் எல்லையில்லா மகிழ்ச்சியுடன் திரும்புகிறனே். தற்போதும் அதனை நான் பெற்றுள்ளேன். என்னை ஈர்த்துள்ள இந்திய மக்களுக்கு திருப்பி செய்ய வேண்டும் என எண்ணுகிறேன். வரும் 2025-ம் ஆணடுக்குள் இந்தியாவில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை அமேசான் இலக்காக கொண்டு செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
First published: January 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்