ஜப்பான் நாட்டை சேர்ந்த சுசுகி மோட்டார் கார்ப் (Suzuki Motor Corp) நிறுவனம் இந்தியாவில் ஒரு புதிய உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவி, இந்தியாவில் தொடர்ந்து தீவிர முதலீடு செய்யும் என்று நிறுவனத்தின் தலைவர் தோஷிஹிரோ சுசுகி (Toshihiro Suzuki) தெரிவித்துள்ளார்.
அண்மையில் குஜராத்தின் தலைநகரான காந்திநகரில் இந்தியாவிற்குள் சுசுகி நிறுவனம் நுழைந்து 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தோஷிஹிரோ சுசுகி, விரைவில் நாட்டில் அமைக்கப்பட உள்ள புதிய Global research and development, இந்தியாவிற்கு மட்டுமின்றி உலகச சந்தைகளுக்கும் அதன் R&D போட்டி மற்றும் திறன்களை வலுப்படுத்த தங்களுக்கு உதவும். கடந்த ஆண்டு உலகம் முழுவதும் தயாரிக்கப்பட்ட சுசுகி குழுமத்தின் 2.8 மில்லியன் ஆட்டோமொபைல்களில் சுமார் 60%-க்கும் அதிகமானவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்றும் தோஷிஹிரோ குறிப்பிட்டார். மேலும் சுசுகி குரூப்பிற்கு இந்தியா மிக முக்கியமான நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.
எனவே நாங்கள் தொடர்ந்து இந்தியாவில் முதலீடு செய்வோம் என்று கூறினார்.இந்தியாவில் சுசுகியின் 40- வது ஆண்டு விழாவை முன்னிட்டு காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ALSO READ | ஆரோக்கியமான நிதி வாழ்க்கைக்கு நீங்கள் செய்ய வேண்டியவை இதோ!
இதனிடையே நுகர்வோர் ஸ்போர்ட்ஸ்-யுட்டிலிட்டி வாகனங்கள் (SUV) போன்ற பெரிய கார்களுக்கு மாறுவதால், சுசுகி நிறுவனம் வளர்ந்து வரும் போட்டியை எதிர்கொள்கிறது. ரெகுலேட்டர்களும் பாதுகாப்பான மற்றும் பசுமை கார்களை தயாரிக்க அறிவுறுத்துகின்றனர். இதனால் செலவுகள் அதிகரிக்கின்றன. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, EV-க்கள் "நாட்டில் ஒரு மௌனப் புரட்சியை" உருவாக்கி இருப்பதாகவும், இந்த மௌனப் புரட்சி நாட்டின் வாகன துறையில் பெரிய மாற்றங்களை கொண்டு வர உள்ளதாகவும் கூறினார். மேலும் இந்த புரட்சிக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாகவும் கூறினார். குஜராத்தில் சுசுகியின் EV பேட்டரி உற்பத்தி நிலையம் மற்றும் ஹரியானாவில் மாருதியின் கார் உற்பத்தி ஆலை ஆகிய 2 முக்கிய திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டியதும் குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Japan, Maruti Suzuki