• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ஜன்தன் கணக்கு: இந்த ஒரு அக்கவுண்ட் இருந்தால் போதும் இத்தனை சலுகைகளை நீங்கள் பெறலாம்!

ஜன்தன் கணக்கு: இந்த ஒரு அக்கவுண்ட் இருந்தால் போதும் இத்தனை சலுகைகளை நீங்கள் பெறலாம்!

ஜன்தன் கணக்கு

ஜன்தன் கணக்கு

ஜன்தன் கணக்குகளுக்கு ரூ. 2 லட்சம் விபத்து காப்பீடு கிடைக்கும்.

  • Share this:
    ஜன்தன் கணக்கை தொடங்கினால் என்னென்ன சலுகைகள் கிடைக்கும், அதை எப்படி தொடங்கலாம் என்ற விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

    ஜன்தன் கணக்கை பத்து வயதுக்கு மேற்பட்ட எந்த இந்திய குடிமகனும் திறக்க முடியும். உங்களின் வழக்கமான சேமிப்புக் கணக்கிலிருந்து உங்கள் ஜன்தன் யோஜனா கணக்கிற்குப் பணத்தையும் மாற்றலாம். மத்திய - மாநில அரசுகளின் நிதியுதவிகள் இந்த ஜன் தன் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு கிஷான் அட்டைகளும் வழங்கப்படுகின்றன. விபத்துக் காப்பீடாக ரூ.2 லட்சம் கிடைக்கிறது. அதேபோல, கணக்கு தொடங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு ஓவர் டிராஃப்ட் வசதியின் கீழ் வங்கிக் கணக்கில் பேலன்ஸ் இல்லாமலேயே பணம் எடுக்க முடியும். ஆயுள் காப்பீடாக ரூ.30,000 வழங்கப்படுகிறது.

    டெபாசிட் செய்யும் தொகைக்கு வட்டி கிடைக்கிறது. இலவச மொபைல் பேங்கிங் வசதியும் உள்ளது. ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூபே டெபிட் கார்டுகள் வழங்கப்படுகின்றன. ஜன் தன் திட்டத்தின் கீழ் இல்லாமல் நீங்கள் சாதாரண வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும் அதை ஜன் தன் கணக்காக மாற்ற முடியும்நீங்கள் வங்கிக் கிளைக்குச் சென்று Rupay கார்டுக்கு விண்ணப்பித்தாலே போதும். உங்களது கணக்கு ஜன் தன் கணக்காக மாறிவிடும். இந்த கணக்கை தொடங்க தேவையான ஆவணங்கள் பற்றி பார்க்கலாம்.

    ஆதார் அட்டை இருந்தால் அதில் முகவரி மாறியிருந்தால் தற்போதைய முகவரியின் சுய சான்றளிப்பு கட்டாயமாகும்.அல்லது வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் அல்லது பாஸ்போர்ட்டைச் சமர்ப்பிக்க வேண்டும்.இவை எதுவுமே இல்லையென்றால் முறையாக சான்றளிக்கப்பட்ட புகைப்படத்துடன் அரசாங்க அதிகாரி வழங்கிய கடிதம் போன்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வழங்கலாம்.

    அதே போல் நீங்கள் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயில் ஜன் தன் கணக்கு தொடங்கினால் என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்பதையும் பார்த்து விடலாம். வழக்கமான சேமிப்பு கணக்கை போலவே இதையும் பயன்படுத்தலாம். SBI வாடிக்கையாளர்களுக்கான நிலையான வைப்புகளில் முதலீடு செய்தல் போன்ற மொபைல் பேங்கிங் அம்சங்களை இந்தத் திட்டம் கொண்டுள்ளது.ரூபே கார்டுடன் ஆகஸ்ட் 28, 2018க்குப் பிறகு பதிவுசெய்யப்பட்ட புதிய PMJDY கணக்குகளுக்கு ரூ. 2 லட்சம் விபத்து காப்பீடு கிடைக்கும்.

    குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்கத் தேவையில்லை, கணக்கு வைத்திருப்பவர் ஓய்வூதியத் திட்டங்களுக்குத் தகுதியுடையவர், மற்றும் PMJDY மற்ற திட்டங்களுக்கு SBI வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகப் பணப் பரிமாற்றம் செய்ய உதவுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: