விரைவில் ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்டை பெறும் மோடியின் வங்கி கணக்கு திட்டம்!

ஜன் தன் கணக்குகளை நிர்வகித்து வருபவர்களுக்கு 10,000 ரூபாய் வரை ஓவர் டிராஃப்ட் மூலம் கடன் பெறும் வசதியும் உள்ளது.

news18
Updated: April 21, 2019, 6:32 PM IST
விரைவில் ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்டை பெறும் மோடியின் வங்கி கணக்கு திட்டம்!
ஜன் தன் கணக்கு
news18
Updated: April 21, 2019, 6:32 PM IST
பிரதமர் மோடியால் 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடக்கி வைக்கப்பட்ட ஜன் தன் சேமிப்பு கணக்கு திட்டத்தில் 5 ஆண்டுகளில் 1 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் என்ற இலக்கை நெருங்கியுள்ளது.

ஜன் தன் சேமிப்பு கணக்குகளில் 2019 ஏப்ரல் 3-ம் தேதி வரையில் 97,66,566 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று அரசு வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன.

மார்ச் மாதம் வரையில் 35.39 கோடி ஜன் தன் சேமிப்பு கணக்குகள் திறக்கப்பட்டுள்ளது. அதில் 27.89 கோடி கணக்குகளுக்கு ரூபே டெபிட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

ஜன் தன் கணக்குகளை நிர்வகித்து வருபவர்களுக்கு 10,000 ரூபாய் வரை ஓவர் டிராஃப்ட் மூலம் கடன் பெறும் வசதியும் உள்ளது.

ஓவர் டிராஃப்ட் என்றால் வங்கி கணக்கில் உள்ளதை விட கூடுதல் தொகையை கடனாக பெறும் வசதியாகும். இந்த சேவை கீழ் பணம் பெறும் போது அதற்கு ஆண்டுக்கு 13 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டும்.

ஜன் தன் வங்கி கணக்குகள் மூலம் தான் ஏழை மக்களால் நேரடி மானியத்தை முழுமையாகவும், எளிதாகவும் பெற முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க:
First published: April 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...