• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்.. விரைவில் PF வட்டி விகிதம் உயர வாய்ப்பு!

மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்.. விரைவில் PF வட்டி விகிதம் உயர வாய்ப்பு!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கடந்த முறை 8.55 சதவீதமாக வட்டி விகித உயர்வை அறிவித்த பொது அணையத்திடம் 600 கோடி ரூபாய் உபரி தொகை இருந்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் விரைவில் 8.55 சதவீதமாக உள்ள EPF மீதான வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

2017-2018 நிதி ஆண்டில் EPF மீதான வட்டி விகிதம் 8.55 சதவீதமாக உள்ளது. 2019 தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி, பொது மக்களுக்கு ஜிஎஸ்டி வரிக் குறைப்பு போன்ற அறிவிப்பை தொடர்ந்து EPF மீதான வட்டி விகிதத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் வருடாந்திர உள் ஆய்வில் வட்டி விகிதம் குறித்த விவாதிக்கப்பட்டதாகவும், அது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிட வாய்ப்புகள் உள்ளது என்று இது குறித்து விவரம் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.

2018-2019 நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதங்கள் EPF திட்டத்திற்கு இணையாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு பத்திரங்களின் வருவாயும் அதிகரித்துள்ளது. எனவே பிஎப் மீதான வட்டி விகிதம் 0.2 சதவீதம் முதல் 0.4 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்புகள் உள்ளதாகவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் 50 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களின் பங்களிப்பாக 1 டிரில்லியன் ரூபாய் உள்ளது எனத் தரவுகள் கூறுகின்றன. வருங்கால வைப்பு நிதி ஆணையம் கடந்த முறை 8.55 சதவீதமாக வட்டி விகித உயர்வை அறிவித்த பொது அணையத்திடம் 600 கோடி ரூபாய் உபரி தொகை இருந்தது.

தற்போது வருங்கால வைப்பு நிதி ஆணையம் பங்கு சந்தையிலும் முதலீடுகளை அதிகரித்துள்ளது. விரைவில் பிஎப் கணக்கு உறுப்பினர்களே தங்களது பங்களிப்பில் எவ்வளவு தொகையைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என்பதைத் தீர்மானிக்கும் முறையையும் அறிமுகம் செய்ய உள்ளது.

மேலும் பார்க்க: இவரை பார்த்து கத்துக்கோங்க... விவசாயத்தில் சாதனை படைக்கும் பொறியியல் பட்டதாரி...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilarasu J
First published: