முகப்பு /செய்தி /வணிகம் / அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அரசின் என்பிஎஸ் பங்களிப்பு உயர்த்த முடிவு!

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அரசின் என்பிஎஸ் பங்களிப்பு உயர்த்த முடிவு!

கோப்புப்படம்

கோப்புப்படம்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

அரசு ஊழியர்கள் என்பிஎஸ் (NPS - National Pension Scheme) உடன் இணைக்கப்பட்ட புதிய பென்ஷன் திட்டம் வேண்டாம் என்று கோரிக்கை வைத்து வரும் நிலையில் மத்திய அரசு தங்களது பங்களிப்பினை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

என்பிஎஸ் உடன் இணைக்கப்பட்டுள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் மற்றும் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு அதில் தங்களுக்கு உள்ள பங்களிப்பை 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளது.

தற்போது புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் பங்களிப்பாக 10 சதவீதமும், அரசு சார்பில் 10 சதவீதமும் என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது.

அரசு ஊழியர்கள் ஓய்வூதிய திட்டம் சர்ச்சை குறித்து வியாழக்கிழமை கூடி விவாதித்த மத்திய அமைச்சகம் ஊழியர்கள் பங்களிப்பை 10 சதவீதமாகத் தொடரவும், அரசின் பங்களிப்பினை மட்டும் 14 சதவீதமாகவும் உயர்த்தி அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

அது மட்டும் இல்லாமல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சக குழு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது 40 சதவீத தொகையினை மொத்தமாகப் பெறலாம் என்று இருந்த வரம்பை 60 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

எனவே புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வரும் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் போது என்பிஎஸ் திட்டத்தில் தங்களது பெயரில் உள்ள 60 சதவீத தொகையை மொத்தமாகவும், 40 சதவீத தொகையைப் பென்ஷனாகவும் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அரசின் இந்தப் பங்களிப்பு உயர்வு உடனே அமலுக்கு வருகிறதா அல்லது 2019 ஏப்ரல் 1 முதல் தானா என்ற விவரங்களை மட்டும் தெரிவிக்கவில்லை.

மேலும் பார்க்க: இணையத்தை கலக்கும் விஜய்-அஜித் வீடியோ

First published:

Tags: National Pension Scheme