இந்தியாவின் OYO நிறுவனத்துக்கு இவான்கா ட்ரம்ப் பாராட்டு..!

கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்குத் தொடர்ந்து தங்கள் நலனையும் கருதாமல் உழைத்து வருபவர்கள் மருத்துவர்கள்.

இந்தியாவின் OYO நிறுவனத்துக்கு இவான்கா ட்ரம்ப் பாராட்டு..!
இவான்கா ட்ரம்ப்
  • Share this:
அமெரிக்காவில் உள்ள OYO இருப்பிடங்களில் அமெரிக்க மருத்துவர்கள் தங்கிக்கொள்ள இலவச வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ள இந்திய நிறுவனமான OYO-வுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார் இவான்கா ட்ரம்ப்.

OYO நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஹோட்டல் நிறுவனமாகும். அமெரிக்காவில் உள்ள OYO இருப்பிடங்களில் அமெரிக்க மருத்துவர்கள் இலவசமாகத் தங்கிக்கொள்ளலாம் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்குத் தொடர்ந்து தங்கள் நலனையும் கருதாமல் உழைத்து வருபவர்கள் மருத்துவர்கள். இதனால், அந்த மருத்துவர்களுக்கு உதவியாக அத்தனை பேரும் இலவசமாக நாட்டில் உள்ள எந்தவொரு OYO இருப்பிடத்திலும் தங்கிக்கொள்ளலாம் என OYO நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதையடுத்து, OYO-வின் அறிவிப்பை மேற்கோள் காட்டி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மகள் இவான்கா ட்ரம்ப் தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற நல்ல எண்ணங்களால் மட்டுமே நாம் ஒரே நாடாக, ஒன்றுபட்ட உலகமாக நிற்கிறோம் என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க: ஆதார்- பான் இணைப்புக்குக் கால அவகாசம் நீட்டிப்பு..!
First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading