Home /News /business /

ITR : கடைசி நாள்.. ஒருவேளை இன்று வருமான வரி தாக்கல் செய்யவில்லை எனில் என்ன நடக்கும்?

ITR : கடைசி நாள்.. ஒருவேளை இன்று வருமான வரி தாக்கல் செய்யவில்லை எனில் என்ன நடக்கும்?

வருமான வரி

வருமான வரி

ITR filling : வரியை முன்கூட்டியே செலுத்தி இருந்தால் அதற்காக மத்திய நிதியமைச்சகம் கொடுக்கும் வட்டியை இழக்க நேரிடும்.

    வருமான வரி தாக்கல் செய்ய டிசம்பர் 31 இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இன்றும் வருமான வரித்தாக்கல் செய்ய தவறினால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

    2020-21ஆம் நிதியாண்டுக்கான தனிநபர் வருமான வரி தாக்கல் செய்ய இரண்டு முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. முதல் அவகாசம் ஏற்கெனவே முடிவடைந்த நிலையில் தற்போது டிசம்பர் 31ஆம் தேதி அதாவது இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தனை நாட்களாக இந்த வேலையை செய்து முடிக்காதவர்கள் இன்று கட்டாயம் செய்து விடுங்கள். பலரும் இதற்கான கால நீட்டிப்பு அறிவிக்கப்படும் என பெரிதும் நம்பி இருந்தனர். ஆனால் வருமான வரித்துறை எந்த ஒரு அறிவிப்பை வெளியிடவில்லை.

    இதையும் படிங்க.. ஏழை எளிய மக்களும் பெரிய சேமிப்பை இங்கு செய்யலாம்.. போஸ்ட் ஆபீஸில் கொட்டி கிடக்கும் திட்டங்கள்!

    அதே நேரம், 2019 - 20ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை, வரி செலுத்துவோர் பலரும் இன்னும் சரிபார்க்கவில்லை. அதனால், 2019 -20ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை சரி பார்க்க, பிப். 28 2022 வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.டிஜிட்டல்' கையொப்பம் இன்றி, மின்னணு முறையில் வருமான வரிக் கணக்கை, ஆதார் ஓ.டி.பி., அல்லது 'நெட்-பேங்கிங்' அல்லது 'டிமேட்' கணக்கு வாயிலாக 120 நாட்களுக்குள் சரிபார்க்கப்பட வேண்டும். இதை தவறியவர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என கருதப்படுவர்.இந்நிலையில் 2019 - 20 வருமான வரி கணக்கை சரிபார்க்காதவர்களுக்கு மட்டும் பிப். 28 2022 வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க.. வருமான வரி கணக்கு சரிபார்க்க பிப்.28ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!

    சரி 2020-21ஆம் நிதியாண்டுக்கான தனிநபர் வருமானத்தை இன்று தாக்கல் செய்யவில்லை எனில் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.

    1. நடப்பு நிதியாண்டில் ஏற்பட்ட இழப்பு, நஷ்டத்தை குறிபிட்டு கேரி பார்வோர்டு செய்ய முடியாது.

    2. அதிகமான வருமான வரியை முன்கூட்டியே செலுத்தி இருந்தால் அதற்காக மத்திய நிதியமைச்சகம் கொடுக்கும் வட்டியை இழக்க நேரிடும்.

    3. வருமான வரி தாக்கல் செய்ய தவறினால் அபராத தொகை மற்றும் தாமத கட்டணம் கட்ட நேரிடும்.

    இதேபோல் எப்போதுமே வருமான வரி சட்டத்தின் படி வருமான வரி செலுத்தவர்களுக்கு 3 வருடம் முதல் 7 வருடம் வரையில் சிறை தண்டனை அளிக்கவும் வாய்ப்பு உள்ளது என்ப்தையும் நினைவில் கொள்ளவும்.

    வருமான வரி செலுத்த தேவைப்படும் ஆவணங்கள்:

    Form 16 (சேவைத் துறையை சார்ந்தவர்கள் வருமான வரித் தாக்கல் செய்ய)

    Form 26AS, பான் கார்டு, ஆதார் கார்டு, சம்பள சான்று



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Business, Income tax

    அடுத்த செய்தி