முகப்பு /செய்தி /வணிகம் / ஐடி தாக்கல் முதல் கேஸ் விலை வரை - இந்த மாதம் அமலுக்கு வந்த 5 புதிய விதிகள்.!

ஐடி தாக்கல் முதல் கேஸ் விலை வரை - இந்த மாதம் அமலுக்கு வந்த 5 புதிய விதிகள்.!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Financial Changes from August 2022 | ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் பல்வேறு புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. , பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் காசோலை விதிகள் முதல் எல்பிஜீ கேஸ் சிலிண்டரின் விலை குறைப்பு வரை என்னென்ன விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

நிதி அறிக்கைகள், வருமான வரி சார்ந்த விஷயங்களுக்கு ஜூலை 31 என்பது மிகவும் முக்கியமான தேதி! வருமான வரி தாக்கல் செய்பவர்கள் ஜூலை 31 ஆம் தேதிக்குள் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். ஜூலை 31 க்குள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யத் தவறினால் பலவிதமான அபராதங்கள் மற்றும் வரிக்கான கூடுதல் வட்டியை செலுத்த வேண்டியிருக்கும்.

இதையடுத்து ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் பல்வேறு புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. புதிதாக அமல்படுத்தியிருக்கும் சில மாற்றங்கள் சாதாரண மனிதனின் அன்றாட அல்லது மாதாந்திர செலவை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் காசோலை விதிகள் முதல் எல்பிஜீ கேஸ் சிலிண்டரின் விலை குறைப்பு வரை என்னென்ன விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

பேங்க் ஆஃப் பரோடா பாசிட்டிவ் பே சிஸ்டம்:

ஆகஸ்ட் 1 2021 22 முதல் பேங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்கள் தாங்கள் வழங்கும் காசோலையின் மதிப்பு 5,00,000 ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும்பட்சத்தில் அந்த தொகையை எலக்ட்ரானிக் உறுதிப்படுத்தல் செய்ய வேண்டும் என்ற புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது. வங்கியின் பாசிட்டிவ் பே சிஸ்டத்தின் கீழ் ₹5,00,000 க்கு அதிகமான காசோலையை வங்கி கிளியர் செய்ய வேண்டும் என்றால் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் அதை உறுதி செய்ய வேண்டும். அதாவது ஒரு நபரின் வங்கிக் கணக்கில் இருந்து அதிக மதிப்புள்ள ஒரு தொகை எடுக்கப்படுகிறது அல்லது பரிவர்த்தனை செய்யப்படுகிறது எண்ணும் பட்சத்தில், வங்கிக் கணக்கின் உரிமையாளர் அந்த பரிவர்த்தனையை அங்கீகரிக்க வேண்டும். இதன் மூலம் காசோலை சம்பந்தப்பட்ட அனைத்து விதமான மோசடிகளையும் தவிர்க்கலாம்.

ITR தாக்கல் அபராதம்:

ஜூலை 31 ஆம் தேதிக்குள் தங்களுடைய IT ரிட்டன்களை தாக்கல் செய்யாத வரி செலுத்த வேண்டிய நபர்களுக்கு, தாமதமான ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் வருமான வரித்துறை சட்டம் பிரிவு 234F இன் கீழ் தாமதமாக வரித்தாக்கல் செய்வதற்கு கட்டணம் விதிக்கப்படுகிறது. எவ்வளவு நாட்கள் தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்யப்படுகிறதோ அந்த அடிப்படையில் கணக்கிடப்பட்டு, அந்தத் தொகையை வரியுடன் சேர்த்து செலுத்த வேண்டும்.

Also Read : சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களும் வருமான வரி அறிக்கை பதிவு செய்ய வேண்டுமா.?

கடந்த நிதியாண்டில் ₹5,00,000 க்கு மேல் வருமானம் பெறுபவர்கள் ஜூலை 31 ஆம் தேதிக்குள் வரி வருமான வரி தாக்கல் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் அவர்கள் ₹5000 அபராதம் செலுத்த வேண்டும்.

கடந்த நிதியாண்டில் ₹5,00,000 க்கு குறைவாக வருமானம் பெறுபவர்கள் ஜூலை 31 ஆம் தேதிக்குள் வரி வருமான வரி தாக்கல் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் அவர்கள் ₹1000 அபராதம் செலுத்த வேண்டும்.

அதிகரித்துள்ள HDFC வங்கியின் ரீடெயில் பிரைம் லேண்டிங் ரேட்:

முன்னணி தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி, வீட்டுக் கடன் மீதான தனது ரீடெயில் பிரைம் லெண்டிங் ரேட்டை அதிகரித்துள்ளது. இதனால் ஏற்கனவே வீட்டுக் கடன் வாங்கியவர்கள் மற்றும் புதிதாக வீட்டுக் கடன் வாங்க இருப்பவர்களுக்கு வீட்டுக்கடன் மிகவும் ‘காஸ்ட்லி’யாக மாறியுள்ளது. வட்டி விகித அதிகரிப்பால், கூடுதலாக திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு தொடங்க நினைப்பவர்கள் நோட் செய்ய வேண்டிய விஷயங்கள்.!

LPG சிலிண்டரின் விலை குறைப்பு:

எல்பிஜி கேஸ் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், 19 கிலோ கமர்ஷியல் சிலிண்டரின் விலை டெல்லியில் ₹36 க்கு குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை குறைப்பு ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற பெரு நகரங்களான, கொல்கத்தாவில் ₹2095.50, மும்பையில் ₹1936.50 மற்றும் சென்னையில் ₹2141 என்ற விலைக்கு விற்பனையாகிறது. அதே நேரத்தில், வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ சிலிண்டர் விலையில் தற்போதுவரை எந்த மாற்றமும் இல்லை.

ATF விலை சரிவு: கோடீஸ்வரர் ஆக எதில் முதலீடு செய்ய வேண்டும்.? எவ்வளவு செய்ய வேண்டும்? முழு விபரம்.!

top videos

    ஏர் டர்பைன் ஃபியூயால் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. ஜெட் ஃபியூயலின் விலை 12% குறைந்துள்ளது. இதற்கு முன்பு ஒரு கிலோ லிட்டரின் விலை 1.38 லட்ச ரூபாயாக இருந்த ஃபியூயலின் விலை, தற்போது 1.21 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் விலைக்குறைப்பு பற்றிய அறிக்கை, எரிபொருள் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Income tax, India, LPG Cylinder