Home /News /business /

ரூ. 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெற இதை செய்தாலே போதும்!

ரூ. 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெற இதை செய்தாலே போதும்!

வருமான வரி

வருமான வரி

80சி, 80சிசிசி மற்றும் 80சிசிடி ஆகிய பிரிவுகளில் நீங்கள் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையில் தான் வருமான வரி விலக்கு பெற முடியும்.

    2021 - 2022 நிதியாண்டில் வருமான வரிக் கணக்கு (ஐடிஆர்) கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31ஆம் தேதியுடன் நிறைவு பெற இருக்கிறது. நீங்கள் இன்னமும் ஐடிஆர் தாக்கல் செய்யவில்லை என்றால், அதை இறுதி கெடுவுக்குள் செய்து முடிக்கவும்.

    அதே சமயம், கொஞ்சம் சாதூர்யமாக செயல்பட்டால் உங்களுக்கான வருமான வரியில் நிறைய பணத்தை நீங்கள் சேமிப்பாக திரும்பப் பெற முடியும். 80சி, 80சிசிசி மற்றும் 80சிசிடி ஆகிய பிரிவுகளில் நீங்கள் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையில் தான் வருமான வரி விலக்கு பெற முடியும். ஆனால், இது தவிர்த்து 10 விதமான வழிமுறைகள் இருக்கின்றன. அதைப் பயன்படுத்தியும் நீங்கள் வரி விலக்கு பெற முடியும்.

    80D

    பிரிவு 80D இன் கீழ், நீங்கள் மருத்துவ காப்பீட்டு பிரீமியத்தின் கீழ் பலன்களைப் பெறலாம். சுய-காப்பீடு, மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ரூ.25,000 வரை விலக்கு கோரலாம். 60 வயதிற்கு உள்பட்ட பெற்றோருக்கு ரூ.25,000 கூடுதல் விலக்கு அனுமதிக்கப்படுகிறது. மேலும், உங்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட உங்கள் பெற்றோருக்கும் ரூ.1 லட்சம் வரை நீங்கள் கோரலாம்.

    80DD

    பிரிவு 80DD இன் கீழ், மாற்றுத்திறனாளிகளை சார்ந்திருக்கும் செலவினங்களின் கீழ் பலன்களைப் பெறலாம். 80% வரையிலான இயலாமைக்கு நீங்கள் ரூ. 75,000 நிலையான விலக்கு (fixed deduction) மற்றும் கடுமையான குறைபாடுகளுக்கு ரூ. 1.25 லட்சம் நிலையான விலக்கு கோரலாம்.

    80E

    நீங்கள் பிரிவு 80E இன் கீழ், கல்விக் கடனுக்கு செலுத்திய வட்டிக் சலுகைகளைப் பெறலாம். உயர்கல்வி கடனுக்காக, கடனுக்கான வட்டியின் மீதான விலக்கு எந்த உச்ச வரம்பும் இல்லாமல் அனுமதிக்கப்படுகிறது.

    மூத்த குடிமக்களுக்காகவே போஸ்ட் ஆபீஸில் இருக்கும் ஸ்பெஷல் திட்டங்கள்!

    80EE

    நீங்கள் முதல் முறையாக வீடு வாங்கிய உரிமையாளர் என்றால் வீட்டுக் கடன் வட்டி செலுத்திய தொகைக்கு பிரிவு 80EE இன் கீழ் பலன்களைப் பெறலாம். இந்த வாய்ப்பு வரி செலுத்தும் தனி நபருக்கு மட்டுமே கிடைக்கும், HUF, AOP மற்றும் நிறுவனம் அடிப்படையில் வரி செலுத்துவோருக்கு பொருந்தாது. வருமான வரிச் சட்டத்தின் 24ஆவது பிரிவின் கீழ், ரூ.2 லட்சம் வரம்பிற்கு மேல், 50,000 ரூபாய் வரை விலக்கு கோரலாம்.

    80G

    பிரிவு 80G இன் கீழ், அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு நீங்கள் வழங்கிய நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்கு பெறலாம். தேசிய பாதுகாப்பு நிதி, பிரதமரின் தேசிய நிவாரண நிதி, தேசிய குழந்தைகள் நிதி போன்ற குறிப்பிட்ட சில சிறப்புவாய்ந்த சமூக அமைப்புகளுக்கு நன்கொடைகள் வழங்கினால் 50% அல்லது 100% வரை விலக்கு கோரலாம்.

    80GG

    பிரிவு 80GG இன் கீழ், HRA இல்லாத பணியாளர்கள் செலுத்தும் வாடகையின் கீழ் விலக்கு பெறலாம். இது மொத்த வருமானத்தில் 25% அல்லது மாதத்திற்கு ரூ.5,000 அல்லது மொத்த வருமானத்தில் 10 சதவீதத்திற்கு மேல் செலுத்தப்படும் வாடகைக்கு குறைவாக இருக்க வேண்டும்.

    ரூ 22 லட்சத்தை சொந்தமாக்கலாம்..எல்.ஐ.சி தரும் அருமையான வாய்ப்பு!

    80TTA

    பிரிவு 80TTA இன் கீழ், சேமிப்பு கணக்கு வட்டியின் கீழ் பலன்களைப் பெறலாம். நீங்கள் ஏதேனும் வங்கி, அஞ்சல் நிலையம் அல்லது கூட்டுறவு சங்கத்தில் அக்கவுண்ட் வைத்திருந்தால் அதிகபட்சமாக ரூ.10,000 விலக்கு கோர முடியும்.

    80U

    பிரிவு 80U இன் கீழ், வரி செலுத்தும் மாற்றுத்திறனாளிகள் விலக்கு கோரலாம். சாதாரண குறைபாடு உடையவர்கள் ரூ.75,000 தொகைக்கும், கடுமையான குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.25 லட்சம் ரூபாயும் விலக்கு பெறப்பட்டுள்ளது.

    80DDB

    பிரிவு 80DDB இன் கீழ், முக்கியமான நோய்களுக்கு சிகிச்சை செய்த செலவின் கீழ் பலன்களைப் பெறலாம். 60 வயது வரை உள்ளவர்களுக்கு நீங்கள் 40,000 ரூபாய் வரை விலக்கு கோரலாம். மூத்த குடிமக்கள் மற்றும் சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு ரூ.1 லட்சம் வரையில் விலக்கு கோரலாம்.

    80GGB மற்றும் 80GGC

    இந்தப் பிரிவின் கீழ், முறையே நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் சார்பில் அரசியல் கட்சிக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகளுக்கு விலக்குகள் கோரலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Income tax, Money, Savings

    அடுத்த செய்தி