ஹோம் /நியூஸ் /வணிகம் /

வருமான வரி தாக்கலில் இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்.. ரூ. 5000 அபராதம் செலுத்த நேரிடும்!

வருமான வரி தாக்கலில் இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்.. ரூ. 5000 அபராதம் செலுத்த நேரிடும்!

வருமான வரி

வருமான வரி

ஆகஸ்ட் 1, 2022 முதல் இந்த விதி மாற்றப்பட்டு 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

ஒவ்வொரு ஆண்டும் வருமான வரித் தாக்கல் செய்வதற்கு குறிப்பிட்ட தேதி தான் இறுதி தேதி என்று வருமான வரித் துறையால் அறிவிக்கப்படும். முந்தைய நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 என்று நிர்ணயிக்கப்படும். தணிக்கைத் தேவைப்படாத வருமான வரிக் கணக்குகளுக்கு கட்டாயமாக ஜூலை 31க்குள் IT ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். இந்த தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், அபராதம் மற்றும் தாமதமான ஃபைலிங் செய்யும் கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டும்.

இந்த ஆண்டும், ஜூலை 31, 2022 அன்று வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய கடைசி தேதி என்று அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது. வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 234F இன் படி வருமான வரி அறிக்கையை ஜூலை 31, 2022க்குப் பிறகு, தாமதமாகத் தாக்கல் செய்தால் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், தாமதமான வருமான வரி அறிக்கைக்கு ரூ. 5,000 வரை விதிக்கப்படுகிறது. ஆனால், நீங்கள் குறிப்பிட்ட தேதிக்குள் ITRஐ பதிவு செய்திருந்தால் கூட, நீங்கள் அபராதம் செலுத்த வேண்டும். அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

பெண்களுக்கான முதலீடு.. தங்கம் அல்லது ரியல் எஸ்டேட் எது பெஸ்ட்?

வருமான வரி துறையின் போர்ட்டலில் நீங்கள் வருமான வரி அறிக்கையை ஜூலை மாதம் இறுதிக்குள் பதிவு செய்திருக்க வேண்டும். வருமான வரி செலுத்தும் கோடிக்கணக்கானவர்கள் கடந்த மாதமே அவ்வாறு தங்களுடைய அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்கள். ஆனால் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்தால் மட்டும் போதாது, உங்களுடைய ITRஐ நீங்கள் வெரிஃபை செய்ய வேண்டும். எனவே நீங்கள் தாக்கல் செய்த ஐடிஆர்-ஐ நீங்கள் சரிபார்த்து உறுதி செய்யவில்லை என்றால் உங்களுடைய ITR செல்லாததாக வருமான வரித்துறை கருதும்.

நீங்கள் வரி செலுத்துபவராக இருந்தாலும் சரி, வரி செலுத்தாமல் வருமான வரி தாக்கல் செய்பவராக இருந்தாலும் சரி, நீங்கள் உரிய படிவத்தில் விவரங்களை உள்ளிட்டு வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்த பின்பு, அதை நீங்கள் வெரிஃபை செய்த பின்பு தான் வருமான வரித்துறை அதை ப்ராசஸ் செய்யும். எனவே வருமான வரி தாக்கல் என்பது விவரங்களை உள்ளிடுவது மட்டுமல்லாமல் நீங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெரிஃபை செய்வதையும் உள்ளடக்கியுள்ளது.

இன்னும் டைம் இருக்கு..பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நீங்களும் சொந்த வீடு கட்டலாம்!

வருமான வரித்துறை, “சில ஆண்டுகளுக்கு முன்பு போல இல்லாமல், இப்போது ஆன்லைன் போர்ட்டலில் நேரடியாக வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யும் வசதி உள்ளதால், வெரிஃபிகேஷனையும் நேரடியாக ஆன்லைனிலையே செய்து கொள்ளலாம். இது விரைவாக, வசதியாக இருக்கிறது மற்றும் உடனடியாக வெரிஃபை செய்ய முடியும்” என்று தெரிவித்தது.

ஜூலை 31 ஆம் தேதிக்குள் 5.83 கோடி வருமான வரி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன என்றும் அவற்றில் ஜூலை 31 ஆம் தேதிக்குள் 4.02 கோடி அறிக்கைகள் மட்டுமே வெரிஃபை செய்யப்பட்டன என்று வருமான வரித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் ஜூலை 31 வரை 3.01 கோடி வருமான வரி அறிக்கைகள் ப்ராசஸ் செய்யப்பட்டு விட்டதாகவும் வருமான வரித்துறையின் வலைத்தளத்தின் அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்த 30 நாட்களுக்குள் மின்னணு அல்லது ஈ-வெரிஃபை வழியாக அதை சரிபார்க்கலாம். இதற்கு முன்பு வெரிஃபை செய்யும் கால அளவு 120 நாட்கள் வரை வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 1, 2022 முதல் இந்த விதி மாற்றப்பட்டு 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. எல்லா தகவல்களுமே மின்னணு மூலமாகவும் ஆன்லைன் வழியாகவும் எளிதாக பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் ஐடிஆர் வெரிபிகேஷன் 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறையின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது

ஒருவேளை நீங்கள் தாக்கல் செய்த வருமான வரி அறிக்கை வெரிஃபை செய்யவில்லை என்றால் நீங்கள் வருமான வரி தாக்கல் செய்யாத நபராகவே கருதப்படுவீர்கள். எனவே உங்களுக்கு ₹5000 அபராதமாக விதிக்கப்படும்.

பின்வரும் வழிகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி, உங்கள் ITRஐ வெரிஃபை செய்யலாம்.

* ஆதாருடன் பதிவு செய்யப்பட்டிருக்கும் மொபைல் எண்ணில் ஓடிபி வெரிபிகேஷன்

* உங்களுடைய முன்கூட்டியே அங்கீகரிக்கப்பட்ட வங்கி கணக்கில் EVC உருவாக்கம் மூலம்

* முன் கூட்டியே அங்கீகரிக்கப்பட்ட டீமாட் கணக்கில் EVC உருவாக்கம் மூலம்

* ஏடிஎம் வழியாக EVC உருவாக்கம் மூலம்

* நெட் பேங்கிங் அல்லது

* டிஜிட்டல் சிக்னேச்சர் சான்றிதழ்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Income tax, RBI