கட்டுமானத்தில் இருக்கும் வீட்டை வாங்குவது என்பது இந்த நாட்களில் சாதாரணமாகிவிட்டது. ஆனால் அப்படி ஒரு வீட்டை வாங்கும்போது அதன் முழு உரிமை நமது பெயருக்கு மாறும் வரை அந்த வீட்டுக்காக வாங்கிய கடனின் வட்டிக்கு வருமான வரி விலக்கு பெற முடியாது. உரிமை பெற்ற பிறகு கட்டும் வட்டிக்கு சலுகை பெற முடியும். ஆனால் அதற்கு முன் கட்டிய வரிப்பணம் வீணா என்றால் இல்லை. அதற்கு சலுகை உண்டு.
பொதுவாக வருமான வரிச் சட்டத்தின் 24(B) பிரிவின் கீழ், ஒரு வீட்டை வாங்குபவர் ஒரு நிதியாண்டில் செலுத்தப்பட்ட ₹2 லட்சம் வரையிலான வீட்டுக் கடன் வட்டிக்கு வரி விலக்கு கோரலாம். ஆனால், ஒரே நிதியாண்டில் ₹ 2 லட்சத்துக்கு மேல் செலுத்தப்படும் வீட்டுக் கடன் வட்டிக்கு வருமான வரிச் சலுகை கிடைக்காது .
இதையும் பாருங்க: 2023-24 நிதியாண்டில் பட்ஜெட்டை தயாரிக்கும் குழு பற்றிய தகவல்கள் இதோ..!
ஒருவர் கட்டிக்கொண்டிருக்கும் பிளாட்டை வாங்க வீட்டு கடன் வாங்கி இருப்பார். பிளாட் கட்டி முடிக்கப்படும் வரை அந்த கடனுக்கு வட்டி கட்டுவார். அதற்கு வரி விலக்கு பெற முடியாது. பின்னர் ஓரளவு பணம் செலுத்தப்பட்டு வீட்டை வாங்கி விடுவார். ஆனால் அந்த பில்டருக்கு மீதம் உள்ள பணத்தை EMI மூலம் செலுத்திக்கொண்டு இருப்பார்.
இப்போது வீடு இவரது பெயருக்கு மாறிவிட்டது. இனி வட்டிக்கு வரி சலுகை கிடைக்கும் என்றாலும் இதற்கு முன்பு கட்டிய வட்டிக்கு வரி சலுகை வாங்க வேண்டும் அல்லவா? அதற்கு தான் இந்த யுத்தி. வீடு வாங்கிய பிறகு, உரிமையாளர் வீட்டிற்கான EMI மற்றும் வீட்டுக் கடன் வட்டியை ஒன்றாகச் செலுத்துவார். காலப்போக்கில், வீட்டுக் கடனுக்கான வட்டியின் பங்கு குறைந்து, அசல் உயரும்.
அப்போது வருமான வரி சட்டப் பிரிவு 24(B) இன் கீழ் கிடைக்கும் அதிகபட்ச பலனைப் பெற, மதிப்பீட்டு ஆண்டில் ஒருவர் செலுத்தும் வீட்டுக் கடன் வட்டியை முதலில் பார்க்க வேண்டும். அதன் பின்னர் வீடு தனது பெயருக்கு மாறுமுன் கட்டிய மொத்த வட்டியையும் சேர்த்து கணக்கிட்டு சலுகை பெற வேண்டும்.
வீட்டு கடன் பெற்றோர் அதன் உரிமையாளர் ஆனபிறகு , சொத்துரிமை பெறுவதற்கு முன் செலுத்திய வீட்டுக் கடன் வட்டியில் தள்ளுபடி கோருவதற்கு விதி அனுமதிக்கிறது. அதாவது ஒருவர் மொத்தத் தொகையையும் ஐந்து பகுதிகளாகப் பிரித்து, அடுத்த ஐந்தாண்டுகளில் வீட்டுக் கடன் வட்டியுடன் சேர்த்து வரிச்சலுகை பெற்றுக்கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக, ஒரு வரி செலுத்துவோர் முன்-உடைமைக் கட்டத்தில் ₹4 லட்சம் வீட்டுக் கடன் வட்டியைச் செலுத்தி, வருமான வரி மதிப்பீட்டு ஆண்டில் ₹1 லட்சம் வீட்டுக் கடன் வட்டியைச் செலுத்துகிறார் என்றால், பிரிவு 24(B) இன் படி அந்த 4 லட்சத்திற்கும் ஒருவர் வருமான வரியைப் பெறலாம். வருமான வரி தாக்கல் செய்யும்போது இப்பொது இருக்கும் ₹1 லட்சம் வீட்டுக் கடன் வட்டியோடு கூடுதலாக ₹80,000 (அதாவது முன்னர் செலுத்திய ₹4 லட்சம் / 5) தள்ளுபடி பெறலாம்.
இனி வீட்டுக்கடன் வட்டிக்கு வீணாக வரி செலுத்திவிட்டோமே என்று வருந்த வேண்டாம். இந்த டெக்னிக் மூலம் வரி சலுகையை பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: EMI, Home Loan, Income tax